தமிழக அரசு கண்டிப்பாக இதை தடுத்தே ஆக வேண்டும்... தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் வைத்த அதிரடி கோரிக்கை..!!

By Ezhilarasan BabuFirst Published Nov 17, 2020, 9:37 AM IST
Highlights

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக பாஜக சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். புயல் மழைக் காலங்களில் கடலில் குளிப்பதை காவல் துறையினர் தடை செய்ய வேண்டும். 

சென்னை காசிமேடு பகுதியில் கடலில் குளித்து விளையாடியபோது கடல் அலையில் சிக்கி 4 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது எனவும், உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் தமிழக பாஜக மாநிலத்தலைவர் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு: 

சென்னை காசிமேடு பகுதியில் கடலில் குளித்து விளையாடியபோது கடல் அலையில் சிக்கி 4 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக பாஜக சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். புயல் மழைக் காலங்களில் கடலில் குளிப்பதை காவல் துறையினர் தடை செய்ய வேண்டும். கடலில் குளிப்பதைத் தடுக்க தொடர் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதையே இந்த துயரச் சம்பவம் உணர்த்துகிறது. 

கடலோரத்தில் வசிப்பவர்களுக்கு குறிப்பாக மீனவ சகோதரர்களுக்கு கடல் பழக்கமானது என்றாலும் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குழந்தைகள் செல்லாமல் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். இனி இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுக்க வேண்டும். உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். 
 

click me!