Latest Videos

இதுக்குதான் பள்ளி கல்லூரிகளுக்கு முன்னாடியே லீவாம்...? கசிந்தது எடப்பாடியின் மாஸ்டர் பிளான்..! 

First Published Jan 11, 2018, 12:53 PM IST
Highlights
The Tamil Nadu government is planning to run government buses with the help of school buses.


பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் இந்த நிலையில் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அவற்றை சமாளிக்க பள்ளி கல்லூரி  பேருந்துகளின் ஓட்டுநர்களை வைத்து அரசு பேருந்துகளை இயக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் இன்று 8 ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தால் பள்ளி - கல்லூரி மாணவர்களும் பொதுமக்களும் கடும் சிரமத்துக்குள்ளாகி உள்ளனர். 

இதனால், நிலைமையை சமாளிக்க அரசு தற்காலிக ஊழியர்களை நியமித்து அரசு பேருந்துகளை இயக்கி வருகிறது. அரசு மற்றும் தொழிற்சங்கங்கள் பிடிவாதமாக இருப்பதால் போராட்டம் தொடர்ந்து கொண்டே செல்கிறது. 

இந்நிலையில், போக்குவரத்துக் கழக தொழிற்சங்கம் வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. ஆக்கப்பூர்வமான பதில் தருமாறு தொழிற்சங்க வழக்கறிஞர்களுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர். 

இதையடுத்து போக்குவரத்து தொழிற்சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

இதனிடையே அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைகழகங்களுக்கு நாளை விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

பெரும்பாலும் இதுவரை இருந்த பொங்கல் தினங்களில் மூன்று நாட்கள் மட்டுமே விடுமுறை அளிக்கப்படும். ஆனால் இந்த முறை 5 நாட்கள் பொங்கல் விடுமுறையாக கணக்கிடப்படுகிறது. இதற்கு என்ன காரணம் என அனைவரும் குழம்பிய நிலையிலேயே ஜாலியாக இருக்கின்றனர். 

இந்நிலையில் விடுமுறையின் ரகசியம் இதுதான் என தகவல் வெளியாகிவருகிறது. அதாவது பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் இந்த நிலையில் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அவற்றை சமாளிக்க பள்ளி கல்லூரி  பேருந்துகளின் ஓட்டுநர்களை வைத்து அரசு பேருந்துகளை இயக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 

click me!