சட்டப்பேரவைக்கு ஆளுநரை அழைக்கலாமா.? வேண்டாமா.? ஸ்டாலின் வெளிநாடு பயணம்- அமைச்சரவையில் இன்று முக்கிய முடிவு

By Ajmal KhanFirst Published Jan 23, 2024, 9:33 AM IST
Highlights

ஜனவரி 28ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார். பிப்ரவரி முதல் வாரத்தில் முதலமைச்சர் சென்னை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் முதலீடுகள் குறித்து ஆலோசிப்பதற்காக அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெறுகிறது. 

இன்று தமிழக அமைச்சரவை கூட்டம்

தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் இதுவரை நடைபெறாத நிலையில் விரைவில் ஆளுநர் உரையுடன் கூட்டமானது விரைவில் நடைபெற உள்ளது. இந்தநிலையில் ஆளுநர் உரை தயாரிப்பது தொடர்பாக ஆலோசிப்பதற்காக தமிழக அமைச்சரவை கூட்டமானது இன்று காலை நடைபெறுகிறது. ஆளுநர் உரையில் சேர்க்க வேண்டிய அம்சங்கள் குறித்தும், புதிய திட்டங்கள், தமிழக அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களின் நிலை, சட்டம் ஒழுங்கு குறித்து பதிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Latest Videos

அதே நேரத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஆளுநர் உரையுடன் கூடிய கூட்டத்தில் ஆளுநர் தமிழக அரசு கொடுத்த வார்த்தைகளை நீக்கிவிட்டு புதிய வார்த்தைகளை சேர்த்து படித்து இருந்தார்.  மேலும் தமிழக சட்ட ஒழுங்கு தொடர்பான கருத்துக்களையும் பேச மறுத்தார். மேலும் சட்ட சபையில் இருந்தும் ஆளுநர் வெளியேறினார். 

ஆளுநரை அழைக்கலாமா.? வேண்டாமா.?

இந்த நிலையில் தான் ஆளுநர் உரை தயாரிப்பது தொடர்பாக இன்று ஆலோசனை நடைபெறுகிறது.  மேலும் தமிழக சட்டமன்றத்தில் ஆளுநரை உரையாற்ற அழைக்கலாமா.? அல்லது தவிர்க்கலமா.? என்பது தொடர்பாகவும் இந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் வருகின்ற 28ஆம் தேதி ஸ்பெயின் நாட்டிற்கு செல்ல உள்ளார். அங்கு பல்வேறு தொழில் முதலீட்டாளர்களை சந்திக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

எனவே அது தொடர்பாகவும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் உலக முதலீட்டாளர் மாநாட்டில் பல ஆயிரம் கோடி அளவிற்கு முதலீடுகள் தமிழக சார்பாக ஈர்க்கப்பட்டது. எனவே அந்த முதலீடுகளுக்கு அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்

DMK : தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு.? 40 தொகுதியிலும் யார் சிறந்த வேட்பாளர்.? களத்தில் இறங்கிய திமுக

click me!