DMK : தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு.? 40 தொகுதியிலும் யார் சிறந்த வேட்பாளர்.? களத்தில் இறங்கிய திமுக

By Ajmal KhanFirst Published Jan 23, 2024, 8:11 AM IST
Highlights

 திமுகவின் செல்வாக்கு எப்படி உள்ளது? யாரை வேட்பாளராக நிறுத்தினால் வெற்ற வெற முடியும்.? தொகுதி நிலவரம் என்ன என்பது தொடர்பாக ஆலோசிக்க தொகுதி வாரியாக அனைத்து நிர்வாகிகளையும் திமுக ஒருங்கிணைப்பு குழு சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளது. 

ஆலோசனையை தொடங்கிய திமுக

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில் தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன.  தற்போது இறுதி கட்டத்தை நோக்கி தேர்தல் பணியானது நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக இரண்டு கட்சிகளும், கூட்டணி கட்சிகளுடன்  தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடத்த குழு அமைத்துள்ளது. மேலும் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவையும் அறிவித்துள்ளது.

Latest Videos

இந்த நிலையில் ஒரு படி மேலே சென்று திமுக சார்பாக ஆலோசனைக் கூட்டமும் தொடங்கி விட்டது. நேற்று அண்ணா அறிவாலயத்தில் நாடாளுமன்றத் தேர்தல் ஒருங்கிணைப்பு குழு கூட்டமானது நடைபெற்றது.  இந்த கூட்டத்தில் குழு நிர்வாகிகளான கே என் நேரு, ஆர் எஸ் பாரதி, எவ. வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். 

தொகுதி வாரியாக நிர்வாகிகளிடம் ஆலோசனை

இந்த கூட்டத்தில் பல்வேறு ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட நிர்வாகிகளான பொறுப்பு அமைச்சர்கள், மாவட்ட பகுதி மற்றும் ஒன்றிய கழகச் செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்கள், மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயர், நகர் மன்ற தலைவர்கள் ஒன்றி குழு தலைவர்கள் பேரூராட்சி தலைவர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளை நேரடியாக சந்தித்து ஆலோசனை நடத்த திட்டம் வகுக்கப்பட்டது. அதன்படி ஒவ்வொரு நாளும் இரண்டு முதல் நான்கு தொகுதிகளில் உள்ள அனைத்து நிர்வாகிகளை இந்த குழு சந்திக்க உள்ளது.

யாருக்கு வெற்றி வாய்ப்பு.?

இதற்கான தேதி மற்றும் தொகுதிக்கான பட்டியலையும் திமுக தலைமை வெளியிட்டுள்ளது.  வருகின்ற 24 ஆம் தேதி முதல் இந்த பணியானது தொடங்குகிறது அதன்படி 24-ஆம் தேதி மாலை 3 மணிக்கு கிருஷ்ணகிரி, திருவள்ளூர் தொகுதி நிர்வாகிகளையும், 27ஆம் தேதி காலை பொள்ளாச்சி கோவை நிர்வாகிகளையும், மாலை நீலகிரி திருப்பூர் மாவட்ட தொகுதி நிர்வாகிகளையும் சந்திக்க உள்ளது.  இதேபோல 28ஆம் தேதி நாமக்கல், ஈரோடு,சேலம், தர்மபுரி ஆகிய தொகுதி நிர்வாகிகளையும் சந்திக்க உள்ளனர்.

 இந்த நிர்வாகிகளை வருகின்ற பிப்ரவரி 5 ஆம் தேதி வரை சந்தித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த சந்திப்பின்போது தங்கள் தொகுதியில் யாருக்கு செல்வாக்கு அதிகம், யாரை வேட்பாளர் நிறுத்தினால் வெற்றி பெற வைக்க முடியும் என்பது குறித்து நிர்வாகிகளின் ஆலோசனையை கேட்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்

டெல்லி முதல் தமிழ்நாடு வரை... வதந்தி பரப்புவதில் பா.ஜ.க.வில் யாரும் விதிவிலக்கு கிடையாது: முதல்வர் ஸ்டாலின்

click me!