திமுகவின் முக்கிய அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி.. என்ன காரணம் தெரியுமா? அதிர்ச்சியில் ஆதரவாளர்கள்.!

Published : Jan 23, 2024, 09:17 AM ISTUpdated : Jan 23, 2024, 09:21 AM IST
திமுகவின் முக்கிய அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி.. என்ன காரணம் தெரியுமா? அதிர்ச்சியில் ஆதரவாளர்கள்.!

சுருக்கம்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்தவர் மருத்துவர் மதிவேந்தன். தற்போது தமிழக வனத்துறை அமைச்சராக இருந்து வருகிறார். 

தமிழக வனத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் உடல்நலக்குறைவு காரணமாக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்தவர் மருத்துவர் மதிவேந்தன். தற்போது தமிழக வனத்துறை அமைச்சராக இருந்து வருகிறார். இந்நிலையில், அமைச்சர் மதிவேந்தன் நீண்ட நாட்களாக குடலிறக்கத்தால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் அறிவுறுத்தி இருந்தனர். அதைத் தொடர்ந்து கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்ட அமைச்சர் மதிவேந்தனுக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது.

இதையும் படிங்க;- DMK : தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு.? 40 தொகுதியிலும் யார் சிறந்த வேட்பாளர்.? களத்தில் இறங்கிய திமுக

தற்போது மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் அமைச்சர் இருந்து வருகிறார். அமைச்சர் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாகவும் இன்று அல்லது நாளை வீடு திரும்புவார் எனவும் மருத்துவமனை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க;-  டெல்லி முதல் தமிழ்நாடு வரை... வதந்தி பரப்புவதில் பா.ஜ.க.வில் யாரும் விதிவிலக்கு கிடையாது: முதல்வர் ஸ்டாலின்

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பாமக பிரச்சனைக்கு திமுக தான் காரணம்.. ராமதாஸை சுற்றி தீய சக்திகள்.. ஒரே போடாக போட்ட அன்புமணி!
ஒரு தலைவருக்கு இது கூடவா தெரியாது.. விஜய்யை கழுவி ஊற்றிய புதுச்சேரி அமைச்சர்.. என்ன விஷயம்?