Dmk Alliance : தமிழகத்தில் திமுக- காங்கிரஸ் தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை திடீர் ரத்து... வெளியான காரணம்.?

By Ajmal Khan  |  First Published Feb 9, 2024, 8:05 AM IST

தமிழகத்தில் திமுக கூட்டணி 39 இடங்களையும் கைப்பற்றும் என கருத்து கணிப்பு வெளியாகியுள்ள நிலையில், திமுக காங்கிரஸ் இடையிலான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை வருகிற 13 ஆம் தேதி நடைபெற இருந்த நிலையில் ரத்து செய்யப்பட்டுள்ளது. வேறொரு நாளில் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 


நாடாளுமன்ற தேர்தல்- தொகுதி பங்கீடு

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நாடு முழுவதும் தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக தனது கூட்டணி கட்சியுடன் முதல் கட்ட பேச்சுவார்த்தையை முடித்துள்ளது அடுத்த கட்ட பேச்சுவார்த்தை விரைவில் நடைபெற உள்ளது. ஆனால் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி தொடர்பாக எந்தவித நிலைப்பாடு எடுக்காமல் இருந்து வருகிறது.  இதற்கு முக்கிய காரணம் என்னவென்று பார்க்கும் பொழுது இரண்டு கட்சிகளும் தங்கள் பக்கம் பாமக மற்றும் தேமுதிகவை இழுக்க திட்டம் போட்டு வருகிறது.  ஆனால் இதுதான் நமக்கு கிடைத்த நேரம் என்று காத்திருக்கும் பாமகவும் தேமுதிகவும் கடந்த தேர்தலை விட கூடுதல் இடங்களை கேட்பதால் கூட்டணியில் இழுபறி ஏற்பட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

திணறும் அதிமுக- பாஜக

தேமுதிகவை பொறுத்தவரை 14 தொகுதியின் ஒரு ராஜ்யசபா தொகுதியையும் யார் கொடுக்கிறார்களோ அவர்கள் பக்கமே கூட்டணி என அறிவித்துவிட்டது.  இதேபோல பாமகவும் 12 மக்களவைத் தொகுதியும் ஒரு ராஜ்யசபா தொகுதியில் கேட்டுள்ளது. இதன் காரணமாக எந்தவித முடிவும் எடுக்க முடியாமல் அதிமுக மற்றும் பாஜக திணறி வருகிறது. இதே போல திமுகவிலும் ஒரு சில தொகுதிகளில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது குறிப்பாக இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஒரே தொகுதியை குறி வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது . மேலும் மக்களுக்கு கமல்ஹாசன் தலைமையால் மக்கள் நீதி மையம் திமுக பக்கம் வர உள்ளது எனவே அந்த கட்சிக்கும் கூடுதல் இடங்களை கொடுக்க வேண்டிய நிலை திமுகவிற்கு ஏற்பட்டுள்ளது. 

திமுக- காங்கிரஸ் பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு

ஏற்கனவே காங்கிரஸ் கட்சியுடன் முதல் கட்ட பேச்சுவார்த்தை முடிவடைந்துள்ள நிலையில் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை வருகிற 13 ஆம் தேதி நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சென்னை வர இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் மல்லிகார்ஜுன கார்கேவின்  பயணம் திடீர் ரத்து செய்யப்பட்டுள்ளது.  குறிப்பாக நாடாளுமன்ற கூட்டம் நடைபெற்று வரும் நிலையில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை வேறொரு நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் கூறப்படுகிறது. மேலும் வருகிற 13 ஆம் தேதி ம்மதா பானர்ஜியுடன் காங்கிரஸ் தொகுதி பங்கீடு தொடர்பாக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய நிலை உருவாகியுள்ளதால் வேறொரு நாளில் திமுக- காங்கிஸ் இடையே தொகுதி பங்கீடு பேச்சு  நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

இதையும் படியுங்கள்

அருந்ததியர் சமுதாயத்தை அவமதித்த டி.ஆர்.பாலுவின் பதவியை பறியுங்கள்.. இந்து முன்னணி ஆவேசம்.!

click me!