ஓபிஎஸ்? ஈபிஎஸ் .? இரட்டை இலை சின்னம் யாருக்கு.? பதில் அளிக்க தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

By Ajmal KhanFirst Published Jan 30, 2023, 11:39 AM IST
Highlights

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தன்னை அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட கோரி இடையீட்டு மனு தாக்கல் செய்ய ஈபிஎஸ் தரப்புக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ள நிலையில் ஓ.பன்னீர் செல்வம் மற்றும்  தேர்தல் ஆணையம் 3 நாட்களுக்குள் பதிலளிக்க உத்தரவுவிட்டு வழக்கு விசாரணை வருகிற வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அதிமுக ஒற்றை தலைமை மோதல்

அதிமுகவில் ஏற்பட்டுள்ள ஒற்றை தலைமை மோதல் காரணமாக ஈரோடு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் முடங்கும் நிலை ஏற்பட்டது. இதனையடுத்து உச்சநீதிமன்றத்தில் இபிஎஸ் தரப்பில் இடையீட்டு மனு கடந்த வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. அதனை திங்கட்கிழமை இன்று தாக்கல் செய்யும் படி நீதிமன்றம் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு அறிவறுத்தியது. இதனையடுத்து இன்று உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்படது. அதில்  ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தங்கள் தரப்பு  வேட்பாளரை நிறுத்த விரும்புவதாகவும், ஆனால் பொதுக்குழு வழக்கு  தீர்ப்பு உச்சநீதிமன்றத்தின் அளிக்கப்படாமல்  இருப்பதை சுட்டிக்காட்டி தனது கையொப்பமிட்ட வேட்பாளரை தேர்தல் ஆணையம் ஏற்க மறுக்கிறது.

புகைப்படத்தை மார்பிங் செய்து வெளியிட்ட பாஜக நிர்வாகி..! சைபர் கிரைமில் புகார் அளித்து அதிரடி காட்டிய காயத்ரி

எனவே இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு சில அறிவுறுத்தல்களை கொடுக்க வேண்டும் குறிப்பாக அதிமுக.வின் பொதுக்குழுவால்  தேர்ந்தெடுக்கப்பட்ட இடைக்கால பொதுச்செயலாளரான தன்னை அங்கீகரிக்க உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்தார். இந்த மனுவை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் 3 நாட்களுக்குள் தேர்தல் ஆணையம் மற்றும் ஓ.பன்னீர் செல்வம் தரப்பு  பதில் அளிக்க உத்தரவிட்டார். மேலும் இடையீட்டு மனுவின் நகலை தேர்தல் அணைய வழக்கறிஞரிடம் வழங்கவும் நீதிபதிகள் அனுமதி கொடுத்தனர்.  இந்த வழக்கு விசாரணையை வருகிற வெள்ளிக்கிழமைக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். அப்போது இடைத்தேர்தலை கருத்தில் கொண்டு  இடைக்கால உத்தரவுக்காக மட்டுமே விசாரிக்கப்படும் என நீதிபதிகள் மீண்டும் திட்டவட்டம் தெரிவித்துள்ளனர்.

இதையும் படியுங்கள்

இடைத்தேர்தலில் பணம் விநியோகமா.? கே.என்.நேரு - ஈவிகேஎஸ் பேசிய வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய அண்ணாமலை

click me!