OPS vs EPS : ஓபிஎஸ்-இபிஎஸ் மோதல், அதிர்ச்சியில் பாஜக..! சமாதானம் செய்வதற்காக வந்தார்களா அண்ணாமலை ,சிடி ரவி.?

By Ajmal KhanFirst Published Jun 23, 2022, 3:58 PM IST
Highlights

அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றை தலைமை தொடர்பாக மோதல் ஏற்பட்ட நிலையில், பாஜக நிர்வாகிகள் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆகியோரை சந்தித்த நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுகவில் மீண்டும் பிளவா?

அதிமுக பொதுக்குழுவில் ஒற்றை தலைமை தொடர்பாக அதிகார மோதல் ஏற்பட்டுள்ளதால், ஓபிஎஸ்- இபிஎஸ் என இரு பிரிவாக அதிமுக பிளவு பட்டுள்ளது. இதன் காரணமாக அதிமுக அடிமட்ட தொண்டர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக இரண்டாக பிளவு பட்டு அதிமுக, அமமுக என பிரிந்துள்ளது. இதன் காரணமாக  ஓட்டுக்கள் சிதறி சட்டமன்ற, நாடாளுமன்ற, உள்ளாட்சி தேர்தலில் அதிமுக தோல்வி பெறும் நிலைக்கு தள்ளப்பட்டது. இந்தநிலையில் தற்போது அதிமுகவில் தற்போது ஏற்பட்டுள்ள அதிகார போட்டியால்  மீண்டும் ஒரு பிளவு ஏற்பட்டுள்ளது. இந்த பிளவால் அதிமுகவிற்கு கூடுதல் இழப்பு ஏற்படும் என்றே கூறப்படுகிறது. அதிமுக பொதுக்குழுவில் ஓபிஎஸ் அவமானப்படுத்தப்பட்ட நிகழ்வு நாடு முழுவதும் பொதுமக்கள் நேரடியாக பார்த்துள்ளனர். இந்த நிலையில் ஓபிஎஸ் அடுத்த கட்ட திட்டம் குறித்து ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.இதற்கிடையே அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பிரச்சனை பாஐகவை அதிர்ச்சி அடையவைத்துள்ளது. 

ஓபிஎஸ்சை சந்தித்த பாஜக நிர்வாகிகள்

 ஓரு வருட காலத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் தமிழகத்தில் இருந்து கணிசமான எம்.பிக்களை மத்தியில் மீண்டும் ஆட்சி அமைக்க கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் பாஜக உள்ளது. எனவே இதற்காக பாஜக தீவிர பணியாற்றி வரும் நிலையில் அதிமுகவில் தற்போது ஏற்பட்டுள்ள பிளவு பாஜகவை அதிர்ச்சி அடையவைத்துள்ளது. ஏற்கனவே சசிகலாவை அதிமுகவில் இருந்து விலக்கியதால் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், மீண்டும் ஒரு பிளவு நாடாளுமன்ற தேர்தலில் பாதிப்பு ஏற்படும் என பாஜக கருதுகிறது. எனவே இந்தநிலையில் தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சிடி.ரவி மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துள்ளனர்.

சமாதானம் செய்ய முயற்ச்சியா?

இந்த சந்திப்பின் போது பாஜக சார்பாக அறிவிக்கப்பட்டுள்ள குடியரசு தலைவர் வேட்பாளருக்கு ஆதரவு தரும்படி கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது. இருந்த போதும் அதிமுகவில் ஏற்பட்டுள்ள மோதல் போக்கை குறைக்க வேண்டும் என்பதற்காக மேலிட உத்தரவு காரணமாக பாஜக நிர்வாகிகள் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ்சை அவசரமாக சந்தித்ததாக கூறப்படுகிறது. அதிமுகவின் உட்கட்சி பிரச்சனையாக இருந்தாலும் தேர்தல் என்று வரும்போது பாஜகவும் இந்த பிரச்சனையால் பாதிக்கப்படும் என்று கருதியே இந்த சந்திப்பு நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்

OPS vs EPS :அதிமுக அழிவுப்பாதையில் செல்கிறது...!புதிய பொதுக்குழு தேதி செல்லாது..?வைத்தியலிங்கம் ஆவேசம்

click me!