பொதுக்குழுவிற்கு ஓபிஎஸ் வந்த பிரசார வாகனத்தின் டயர் பஞ்சர் செய்யப்பட்டதா? உண்மை நிலவரம் என்ன?

By Ajmal KhanFirst Published Jun 23, 2022, 2:01 PM IST
Highlights

அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு வந்த ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தின் வாகனத்தின் டயர் பஞ்சர் செய்யப்பட்டதாக வெளியான தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கூச்சல், குழப்பத்திற்கிடையே நடைபெற்ற பொதுக்குழு

ஒற்றை தலைமை விவகாரம் அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்,பொதுக்குழு கூட்டம் இன்று பரபரப்பாக கூடி பரபரப்பாகவே  முடிவடைந்துள்ளது. அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு அனுதி வழங்க கூடாது என ஓபிஎஸ் காவல்துறையிடமும், நீதிமன்றத்திலும் முறையிட்டார். காவல்துறை ஓபிஎஸ் கோரிக்கையை நிராகரித்த நிலையில், நீதிமன்றத்தில் சுமார் 13 மணி நேர சட்ட போராட்டம் நடைபெற்றது. இதில் பொதுக்குழு கூட்டம் நடைபெறலாம் ஆனால் 23 தீர்மானங்களை தவிர்த்து புதிய தீர்மானங்கள் இயற்றக்கூடாது என கூறப்பட்டது. இந்த கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் பொதுக்குழு கூட்டம் தொடங்கியது. கூட்டத்தில் ஓபிஎஸ் கலந்து கொள்ளக்கூடாது என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஓபிஎஸ் ஒழிக என்ற முழக்கம் எழுப்பப்பட்டது. இதனால் பொதுக்குழு அரங்கம் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதனையடுத்து முன்னாள் அமைச்சர்கள், பொதுக்குழு உறுப்பினர்களை அமைதி காக்கும் படி கேட்டுக்கொண்டனர். இதையும் மீறி தொண்டர்கள் கடும் கூச்சல் எழுப்பியவாறு இருந்தனர். இதனையடுத்து பொதுக்குழு கூட்டம் தொடங்கியதும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் ஒப்புதல் அளித்த 23 தீர்மானங்களை நிராகரிப்பதாக ஆவேசமாக சி.வி.சண்முகம் தெரிவித்தார். இதனை துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமியும் ஆமோதித்தார். 

ஓபிஎஸ் காரின் டயர் பஞ்சரா?

இதனால் பொதுக்குழு அரங்கில் பரபரப்பான சூழ்நிலை உருவான நிலை உருவானது. இதனையடுத்து ஜூலை மாதம் 11 ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அப்போது ஒற்றை தலைமை தொடர்பாக முடிவெடுக்கப்படும் எனவும் அப்போது புதிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என கே.பி.முனுசாமி குறுப்பிட்டார். இதனால் கோபமடைந்த ஓபிஎஸ் கூட்டத்தில் இருந்து வெளியே செல்ல முற்பட்டார். அப்போது துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் சட்ட விதிகளுக்கு முரண்பட்டு அதிமுக பொதுக்கழு கூட்டம் நடைபெறுவதாக மேடையிலேயே முழங்கினார். அப்போது அதிமுக தொண்டர்கள் கடும் கூச்சல் எழுப்பினர். ஓபிஎஸ் மீது தண்ணீர் பாட்டில்களையும் வீசினர். இதனையடுத்து வெளியே வந்த ஓபிஎஸ் தான் வந்த பிரச்சார வேனில் ஏறி மீண்டும் வீட்டிற்கு சென்றார்.அப்போது அந்த வாகனத்தின் டயரில் காற்று இல்லாமல் இருந்தது. வேனில் அதிகமானோர் ஏறியதால் டயர் அமுங்கியதா? அல்லது இபிஎஸ் ஆதரவாளர்கள் டயரை பஞ்சர் ஆக்கிவிட்டார்களா? என்ற கேள்வி தொண்டர்கள் மத்தியில் எழுந்தது.  

இதையும் படியுங்கள்

OPS vs EPS :அதிமுக அழிவுப்பாதையில் செல்கிறது...!புதிய பொதுக்குழு தேதி செல்லாது..?வைத்தியலிங்கம் ஆவேசம்

click me!