தலைமைச் செயலகத்தில் பணி புரியும் ஊழியர்கள், அவர்களது குடும்பத்தினர் 200 பேருக்கு கொரோனா.?? அதிர்ச்சி தகவல்..

Published : Apr 30, 2021, 12:46 PM ISTUpdated : Apr 30, 2021, 12:47 PM IST
தலைமைச் செயலகத்தில் பணி புரியும் ஊழியர்கள், அவர்களது குடும்பத்தினர் 200 பேருக்கு கொரோனா.?? அதிர்ச்சி தகவல்..

சுருக்கம்

தலைமைச் செயலக ஊழியர்கள் அவரது குடும்பத்தினர் 200 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாக இருப்பதால்  50 சதவீதமாக பணியாளர்களுடன் சுழற்சி முறையை அமல்படுத்த வேண்டும் என்று  தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் வலியுறுத்தியுள்ளது. 

தலைமைச் செயலக ஊழியர்கள் அவரது குடும்பத்தினர் 200 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாக இருப்பதால்  50 சதவீதமாக பணியாளர்களுடன் சுழற்சி முறையை அமல்படுத்த வேண்டும் என்று  தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்று, மிகத் தீவிரமாக பரவி வருகிறது. தமிழகத்தில் கொரோனா தொற்று மிகத் தீவிரமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 17 ஆயிரத்து 897 பேருக்கும் அதிகமானோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இதனால் கொரோனா பாதித்தவரின் ஒட்டு மொத்த எண்ணிக்கை 11,48 ,064  ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில்  கடந்த 24 மணிநேரத்தில் 107 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் மாநிலத்தில் மொத்த பலி எண்ணிக்கை 13 ஆயிரத்து 933 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்று ஒரு நாளில் மட்டும் 5 ஆயிரத்து 448 பேருக்கு தொற்றுக்கு உறுதியாகி உள்ளது. இதுவரை சென்னையில் மொத்த கொரோனா பாதிப்பை எண்ணிக்கை 3 லட்சத்து 28 ஆயிரத்து 520 ஆக உள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை கொரோனாவால் 4701 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த சூழலில் சென்னை தலைமைச் செயலகத்திலும் பணி புரியும் ஊழியர்கள் அவரது குடும்பத்தினர் 200 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதால்  50 சதவீதமாக பணியாளர்களுடன் சுழற்சி முறையை அமல்படுத்த வேண்டும் என்று  தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக அச்சங்கத்தினர் தலைமைச்செயலாளருக்கு கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளனர். அந்த மனுவில் 55 வயதுக்கு மேற்பட்ட பணியாளர்களை பணிக்கு வருவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும், அதே போல பணியாளர்களின் எண்ணிக்கை 50 சதவீதமாக குறைத்து சுழற்சி முறையை அமல்படுத்த வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.  

 

PREV
click me!

Recommended Stories

ஒரு தலைவருக்கு இது கூடவா தெரியாது.. விஜய்யை கழுவி ஊற்றிய புதுச்சேரி அமைச்சர்.. என்ன விஷயம்?
vande mataram: வந்தே மாதரம்தான் நம் விசுவாசத்தின் அடையாளமா..? தேசபக்தியை மதத்துடன் இணைக்காதீர்கள்..! ஒவைசி எச்சரிக்கை..!