நிழற்படக் கலைஞராக வாழ்க்கையைத் தொடங்கி உச்சம் தொட்டவர்.. கே.வி ஆனந்திற்கு திமுக தலைவர் இரங்கல்.

By Ezhilarasan BabuFirst Published Apr 30, 2021, 12:22 PM IST
Highlights

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் திரு. செ.அரங்கநாயகம் அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக மறைவெய்தினார் என்ற துயரச் செய்தி கேட்டு மிகுந்த வேதனைக்குள்ளானேன். அவரது மறைவிற்குத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் 

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மறைந்த திரைப்பட இயக்குனர் கே.வி ஆனந்த், முன்னாள் அமைச்சர் அரங்கநாயகம் ஆகியோரின் இறப்புக்கு இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார் அதன் விவரம்:

இரங்கல் செய்தி 1: அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் திரு. செ.அரங்கநாயகம் அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக மறைவெய்தினார் என்ற துயரச் செய்தி கேட்டு மிகுந்த வேதனைக்குள்ளானேன். அவரது மறைவிற்குத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராகவும், கல்வி அமைச்சராகவும் பணியாற்றிய திரு. அரங்கநாயகம் அவர்களின் மறைவு தமிழகத்திற்குப் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் அ.தி.மு.க.வினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும்,ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். 

இரங்கல் செய்தி 2: திரைப்பட இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான திரு. கே.வி.ஆனந்த் அவர்கள் மாரடைப்பால் காலமானார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். நிழற்படக் கலைஞராக வாழ்க்கையைத் தொடங்கி, ஒளிப்பதிவாளர், இயக்குநர் என தன் உழைப்பினால் உயரம் தொட்டவர். அயன், கோ, மாற்றான், கவண் உட்படப் பல வெற்றிகரமான திரைப்படங்களை இயக்கிய சிறந்த படைப்பாளியான அவர், தேசிய விருது பெற்ற பெருமைக்குரியவர். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், திரையுலக நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இரங்கல் செய்தி 3 (ட்விட்டர் பதிவு): மூத்த வழக்கறிஞரும் இந்திய அரசின் முன்னாள் தலைமை வழக்குரைஞருமான திரு. சோலி சோராப்ஜி அவர்களின் மறைவுச்செய்தி கேட்டு ஆழ்ந்த வருத்தமடைந்தேன். முன்னணி சட்ட வல்லுநர்களில் ஒருவராக விளங்கிய அவரது மறைவு ஈடுசெய்யவியலாதது. அவரது மறைவால் வாடும் அவருடன் பணிபுரிந்தவர்கள், அவரது நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்க்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
 

click me!