தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கைக்கு தடையா? கிருஷ்ணசாமி தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி...!

Published : Apr 30, 2021, 12:09 PM IST
தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கைக்கு தடையா? கிருஷ்ணசாமி தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி...!

சுருக்கம்

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்கக் கோரிய புதிய தமிழகம் கிருஷ்ணசாமி தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்கக் கோரிய புதிய தமிழகம் கிருஷ்ணசாமி தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 

தமிழக சட்டமன்றத்துக்கு கடந்த ஏப்ரல் 6ம் தேதி நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள், மே 2ம் தேதி எண்ணப்பட உள்ளன. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கைக்கு தடை கோரி புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தனது மனுவில், தமிழகத்தில் தேர்தல் நேரத்தில் பண பலத்தை தடுக்க இரு தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்படுவர் என தேர்தல் அறிவிப்பின்போது தலைமை தேர்தல் ஆணையர் அறிவித்ததாகவும், இருந்த போதும் தமிழகத்தில் திமுக, அதிமுக கட்சிகளின் சார்பில் பணபட்டுவாடா நடந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

பல தொகுதிகளில் நடந்த பணபட்டுவாடா தொடர்பாக தேர்தல் அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும், தமிழகத்தில் மட்டும் 430 கோடி ரூபாயை தேர்தல் ஆணையம் பறிமுதல் செய்துள்ளாதாகவும் கூறியுள்ளார். பண பட்டுவாடா தொடர்பாக உச்ச நீதிமன்ற நீதிபதி அடங்கிய குழுவை நியமித்து விசாரணை நடத்தக் கோரியும், வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க கோரியும்  அளித்த புகாரை பரிசீலிக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரியுள்ளார்.

இந்நிலையில், இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்த போது தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்கக் கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும், பணப்பட்டுவாடா தொடர்பாக உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த கோரியதும் நிராகரிக்கப்பட்டுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!