
இந்தியாவின் சில்லறை பணவீக்கம் 7 சதவீதத்தை தாண்டிவிட்டதால் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலை நமக்கும் ஏற்படும் அபாயம் உள்ளது என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடி
சிவங்கையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம்;- பெட்ரோல், டீசல் மீதான கடுமையான வரி விதிப்பால் சில்லறை பண வீக்கம் 7 சதவீதம் தாண்டிவிட்டதாக கவலை தெரிவித்தார். இலங்கையின் பொருளாதாரப் பிரச்சினைக்கு காரணம் நிர்வாக சீர்கேடு, தவறான பொருளாதார கொள்கையை பின்பற்றியதன் காரணமாக மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் இலங்கை மூழ்கி இருக்கின்றது. அதே தவறான கொள்கைகளின் சாயல் இந்திய அரசின் கொள்கைகளிலும் கண்கூடாக தெரிகின்றது.
எச்சரிக்கும் ப.சிதம்பரம்
மேலும், ஒரு நாடு ஒரு மொழி என்பது மத்திய அரசு கடைசியாக எடுத்து இருக்கக்கூடிய அஸ்திரம். இதற்கு முன்பு ஒரு நாடு ஒரு ரேஷன் கார்டு. ஒரு நாடு ஒரு பாடத்திட்டம், ஒரு நாடு ஒரு மதம், ஒரு நாடு ஒரு உணவு பழக்கம், ஒரு நாடு ஒரு உடை பழக்க வழக்கம், என்று பேசி தற்போது மக்களவை அவைத்தலைவர் ஒரு நாடு ஒரு சட்டப்பேரவை அமைப்பு என்று உருவாக்க முயற்சி மேற்கொள்கிறார். இது சமதர்ம நாடா இல்ல சர்வாதிகார நாடா? என்று ப.சிதம்பரம் கேள்வி எழுப்பினார்.