இரண்டாவது அலை மிக கொடூரமானது.. காரணம் இதுதான்.. அலறும் ஐசிஎம்ஆர்..

Published : Apr 21, 2021, 11:56 AM IST
இரண்டாவது அலை மிக கொடூரமானது.. காரணம் இதுதான்.. அலறும் ஐசிஎம்ஆர்..

சுருக்கம்

தற்போது பரவி வரும் இந்த இரண்டாவது அலையால் அதிகம் பேருக்கு மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. அதனாலேயே அதிகம் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது எனவும், அதேபோல் இரண்டு அலைகளுக்கும் இடையில் உயிரிழப்பு விகிதத்தில் மாற்றம் இல்லை எனவும் முதல் அலையை விட இரண்டாவது அலையின் தீவிரத்தன்மை சற்று குறைவாக உள்ளது எனவும் ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

கொரோனா இரண்டாவது அலை முதல் அலையைப் போல் இல்லை என்றும், அறிகுறிகள் இல்லாமலேயே இது ஏராளமானோரை பாதித்து வருகிறது எனவும், அதேசமயம் இரண்டாவது அலையால் பாதிக்கப்படும் நோயாளிகள் அதிகம் பேருக்கு மூச்சுத்திணறல் ஏற்படுகிறது எனவும், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் அதிர்ச்சி தெரிவித்துள்ளது. குறிப்பாக 30 முதல் 45 வயதுக்குட்பட்டவர்களை அதிகம் பேர் பாதிக்கப்படுவதாகவும், முதல் அலைக்கும் இரண்டாவது அலைக்கும் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது எனவும் கூறியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. 

நோய்தொற்று பரவலை தடுக்க மத்திய மாநில அரசுகள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அதன்படி நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,95,041  பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,56,16, 130  ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் இதுவரை 13,01,19, 310 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.  இதனைத் தொடர்ந்து தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளன.

டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்களில் ஒரு வாரகாலம் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மருத்துவ சேவைகளில் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. அதேபோல் கொரோனா நோயாளிகளை காப்பாற்றுவது, ஆக்ஸிஜனை உற்பத்தியை அதிகரிக்க மத்திய மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றன. குறிப்பாக தற்போது பரவி வரும் இரண்டாவது அலை 35 வயது முதல் 45 வரைக்குட்பட்டவர்களையே அதிகம் பாதித்து வருவதாக, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கூறியுள்ளது. மேலும் முதல் மற்றும் இரண்டாவது அலை இடையேயான பாதிப்புகள் என்னென்ன என்பது குறித்து ஐ சி எம் ஆர் ஒப்பீடு செய்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 

அதில், முதலில் பரவிய வைரசால் வரட்டு இருமல், மூட்டுவலி, தலைவலி, அசதி, தொண்டை வலி, வாசனை இழப்பு போன்ற அறிகுறிகள் தென்பட்டன. ஆனால் இரண்டாவது அலையில் அப்படி அல்ல, அறிகுறிகள் இல்லாமல் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக 30 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். தற்போது பரவி வரும் இந்த இரண்டாவது அலையால் அதிகம் பேருக்கு மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. அதனாலேயே அதிகம் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது எனவும், அதேபோல் இரண்டு அலைகளுக்கும் இடையில் உயிரிழப்பு விகிதத்தில் மாற்றம் இல்லை எனவும் முதல் அலையை விட இரண்டாவது அலையின் தீவிரத்தன்மை சற்று குறைவாக உள்ளது எனவும் ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. 

 

PREV
click me!

Recommended Stories

விஜய் கொடுத்த அசைன்மெண்ட்..! செங்கோட்டையனின் வருகைக்கு பின் அடியோடு மாறிய தவெக..!
திமுக கூட்டணிக்குள் விஜய் வைத்த வேட்டு..! இருதலைக் கொல்லியான காங்கிரஸ்..! மு.க.ஸ்டாலின் பகீர் முடிவு..!