தலைவி படத்தில் அந்தக் காட்சியை நீக்க வேண்டும்... முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் பிடிவாதம்..!

Published : Sep 10, 2021, 03:52 PM IST
தலைவி படத்தில் அந்தக் காட்சியை நீக்க வேண்டும்... முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் பிடிவாதம்..!

சுருக்கம்

தலைவி படத்திற்கு அதிமுக-வினரும் மக்களும் ஆதரவு தருவார்கள். எம்.ஜி.ஆரை ஜெயலலிதா அவமதித்தது போல சில காட்சிகள் இருக்கின்றன. 

தலைவி படத்தில் சில காட்சிகள் திரிக்கப்பட்டுள்ளன. தலைவர் எம்ஜிஆரை மதிக்காமல் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா செயல்பட்டார் என்பது போன்ற சித்தரிப்பை ஏற்க முடியாது. அக்காட்சிகளை நீக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார். 

இயக்குனர் விஜய் இயக்கத்தில் கங்கனா ரனாவத், அரவிந்த் சாமி உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் தலைவி. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு குறித்த இந்த படம் பல்வேறு சிக்கல்களை தாண்டி இன்று வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இந்த திரைப்படத்தை பார்த்த முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் ” தலைவி படத்திற்கு அதிமுக-வினரும் மக்களும் ஆதரவு தருவார்கள். எம்.ஜி.ஆரை ஜெயலலிதா அவமதித்தது போல சில காட்சிகள் இருக்கின்றன. அதனை இயக்குநர் நீக்கிட வேண்டும். தலைவி படத்தில் சில காட்சிகள் திரிக்கப்பட்டுள்ளன. தலைவர் எம்ஜிஆரை மதிக்காமல் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா செயல்பட்டார் என்பது போன்ற சித்தரிப்பை ஏற்க முடியாது. அக்காட்சிகளை நீக்க வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
 

PREV
click me!

Recommended Stories

முக்தார் மீது நடவடிக்கை வேண்டும்.. டெல்லி சென்ற கரு.நாகராஜன்.. ஜி.கே.வாசனிடம் கடிதம்!
மகளிர் உரிமைத் தொகை உயருகிறது..! எவ்வளவு தெரியுமா? முதல்வர் சொன்ன குட்நியூஸ்!