7 ஆண்டுகளுக்கு முன்பே எஸ்.ஐ-யை மன்னிக்காமல் விட்டிருந்தால் சாத்தான்குளம் சம்பவம் நடந்திருக்காது... கதறும் மணி!

By Thiraviaraj RMFirst Published Jul 1, 2020, 11:45 AM IST
Highlights

சாத்தான்குளம் சம்பவத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள எஸ்.ஐ பாலகிருஷ்ணனை 2013-ல் நடந்த ஒரு சம்பவத்தில் மன்னிக்காமல் விட்டிருந்தால் இன்று இரு உயிர்கள் போயிருக்காது என அப்போது பாதிக்கப்பட்ட ஒருவர் கதறியுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது. 

சாத்தான்குளம் சம்பவத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள எஸ்.ஐ பாலகிருஷ்ணனை 2013-ல் நடந்த ஒரு சம்பவத்தில் மன்னிக்காமல் விட்டிருந்தால் இன்று இரு உயிர்கள் போயிருக்காது என அப்போது பாதிக்கப்பட்ட ஒருவர் கதறியுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது. 

சாத்தான்குளத்தில் மரணத்தில் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்ட ஏ.எஸ்.பி, டி.எஸ்.பி ஆகியோருக்கு பணி மாற்றம் வழங்கப்பட்டுள்ளது. காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்ட ஏ.எஸ்.பி கோபி, தூத்துக்குடி மாவட்ட பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். இதேபோன்று, காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஏ.எஸ்.பி குமார், நீலகிரி மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.  காத்திருப்போர் பட்டியலில் இருந்த டி.எஸ்.பி பிரதாபன், புதுக்கோட்டை நில அபகரிப்பு தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், கள்ளக்குறிச்சி காவல் துணை கண்காணிப்பாளர் ராமநாதன், சாத்தான்குளம் சரக காவல் துணை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் 2013-ல் எஸ்.ஐ பாலகிருஷ்ணன் நெல்லை மாவட்டம், திருக்குறுங்குடியில் பணியாற்றியுள்ளார். அப்போது மணி என்பவரை ரத்தம்  அளவுக்கு கடுமையாக தாக்கியுள்ளார் சாத்தான் குளம் இரட்டை கொலைவழக்கில் தொடர்புடைய அந்த எஸ்.ஐ. இது குறித்து மனித உரிமை ஆணையத்தில் மணி புகாரளிக்க,  விசாரணை நடத்தப்பட்டது.

 இந்த புகாரால் தனது வேலை பரிபோகும் நிலை ஏற்பட்டதை அறிந்த பாலகிருஷ்ணன், வழக்கை திரும்ப பெறுமாறு மணியிடம் மன்னிப்பு கோரியுள்ளார். இது குறித்து பேசிய மணி, தான் பாலகிருஷ்ணனை மன்னித்து விட்டதால் இன்று 2 உயிர் போய்விட்டதாக வருத்தம் தெரிவித்துள்ளார்.

click me!