அலிபாபாவுக்கு அஞ்சும் பலவீனமான பிரதமர் மோடி... கலங்கடிக்கும் கரூர் ஜோதிமணி..!

Published : Jul 01, 2020, 11:21 AM IST
அலிபாபாவுக்கு அஞ்சும் பலவீனமான பிரதமர் மோடி... கலங்கடிக்கும் கரூர் ஜோதிமணி..!

சுருக்கம்

இப்படியொரு பலவீனமான பிரதமரின்கீழ் இந்ததேசம் எப்படி பாதுகாப்பாக இருக்கமுடியும்? என கரூர் தொகுதி காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி கேள்வி எழுப்பியுள்ளார்.  

இப்படியொரு பலவீனமான பிரதமரின்கீழ் இந்ததேசம் எப்படி பாதுகாப்பாக இருக்கமுடியும்? என கரூர் தொகுதி காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘’சீனா என்ற வார்த்தையை உச்சரிக்கவே மோடி ஏன் அச்சப்படுகிறார்? செயலிகளை மட்டும் தடை செய்வது ( அலிபாபா தடை இல்லை) எப்படி 20 இராணுவ வீரர்களின் உயிருக்கும், ஆக்கிரமிக்கப்பட்ட நமது நிலப்பரப்பிற்கும் பதிலடியாகும்? இப்படியொரு பலவீனமான பிரதமரின்கீழ் இந்ததேசம் எப்படி பாதுகாப்பாக இருக்கமுடியும்?

அனைத்து உயிர்களுக்கும் அர்ப்பணிப்புடன் மாபெரும் சேவை ஆற்றி வரும், குறிப்பாக இந்த கொரொனா தொற்றுக்கு எதிரான போராட்ட களத்தில் முன்னணிப்படையாக உயிரைப் பணயம் வைத்து பாடுபட்டுவரும் மருத்துவர்களுக்கும்,செவிலியர்களுக்கும்,மருத்துவ பணியாளர்களுக்கும் தலைவணங்குகிறேன்’’ எனத் தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

ரத்தக் களரியான ஈரான்... காமெனிக்கு எதிராக போராட்டங்களை தூண்டிய டிரம்ப்.. உலுக்கும் 217 பேர் மரணம்..!
ஓய்வூதியம்.. மத்திய அரசு திட்டத்திற்கு ஸ்டிக்கர் ஒட்டும் திமுக.. பழனிசாமி விளாசல்