சாத்தான்குளம் சம்பவம். சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு.!! திசைமாறும் மரண வழக்கு..

By T BalamurukanFirst Published Jul 1, 2020, 9:03 AM IST
Highlights

சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி சி.பி.சி.ஐ.டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்துள்ளது. கோவில்பட்டி கிளைச் சிறை ஆவணங்கள் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  அரசு கட்டுப்பாட்டில் இருந்தபோது மர்ம மரணம் என சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது.
 


சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி சி.பி.சி.ஐ.டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்துள்ளது. கோவில்பட்டி கிளைச் சிறை ஆவணங்கள் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  அரசு கட்டுப்பாட்டில் இருந்தபோது மர்ம மரணம் என சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது.

தூத்துக்குடி, சாத்தான்குளத்தில் பென்னிக்ஸ் அவரது தந்தை ஜெயராஜ் ஊரடங்கு நேரத்தை மீறி செல்போன் கடையைத் திறந்து வைத்திருந்ததால் போலீஸாரால் கைது செய்யப்பட்டு காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர் காயங்களுடன் கோவில்பட்டி கிளைச்சிறையில் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். போலீஸாரால் கடுமையாகத் தாக்கப்பட்டதில் இருவரும் உயிரிழந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது வருகின்றது.
இந்தியா முழுவதும் பல தரப்பிலும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த இருவர் மரணத்தை எதிர்க்கட்சிகள் கடுமையாகக் கண்டித்தன. தூத்துக்குடி மக்கள் வீதியில் இறங்கிப் போராட்டம் நடத்தினர். சம்பந்தப்பட்ட போலீஸார் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய அனைவரும் கோரிக்கை வைத்தனர். உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன் வந்து வழக்கைக் கையில் எடுத்து விசாரித்து வருகிறது.


மாநில மனித உரிமை ஆணையமும் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. அகில இந்திய அளவில் ராகுல் காந்தி முதல் சினிமா, கிரிக்கெட் பிரபலங்கள் இவ்விவகாரத்தில் தங்கள் கண்டனத்தைப் பதிவு செய்தனர். சம்பந்தப்பட்ட போலீஸார் மீது கொலை வழக்குப் பதிவு செய்து கைது செய்ய கோரிக்கை வலுத்துவந்தது. மெடிக்கல் ரிப்போர்ட் கொடுத்த பெண் டாக்டர் திடீரென விடுமுறையில் சென்றுள்ளார். தடையங்கள் ஆங்காங்கே மறைக்கப்பட்டும் அழிக்கப்பட்டும் வருகின்றது.
இந்நிலையில், சாத்தான்குளம் காவல் நிலையத்தில் வழக்கு விசாரணைக்குச் சென்ற மாஜிஸ்ட்ரேட் பாரதிதாசனை மிரட்டியதாகப் புகார் எழுந்தது. இதையடுத்து எஸ்.பி.பாலகோபாலன், ஏஎஸ்பி குமார், டிஎஸ்பி பிரதாபன் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டது.

எஸ்.பி. அருண்பாலகோபாலன் இந்தச் சம்பவத்தைக் கையாண்ட விதம் குறித்து விமர்சனம் எழுந்தது. இந்நிலையில் எஸ்.பி. அருண்பாலகோபாலன் மாற்றப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். ஏஎஸ்பி குமார், டிஎஸ்பி பிரதாபன் மாற்றப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டனர்.தூத்துக்குடி எஸ்.பி.யாக விழுப்புரம் எஸ்.பி. ஜெயக்குமார் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஏஎஸ்பி குமார் மற்றும் டிஎஸ்பி பிரதாபனுக்கு உடனடியாக பதவி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை டிஜிபி அலுவலகம் பிறப்பித்துள்ளது.


பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் நீதியை எதிர்நோக்கி உள்ளனர். ஒரு நொடி கூட வீணாகக்கூடாது. எனவே சி.பி.சி.ஐ.டி. நெல்லை துணை போலீஸ் சூப்பிரண்டு அனில்குமார், இந்த வழக்கு விசாரணையை தற்காலிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும். தூத்துக்குடி மாவட்ட நீதிபதி, மாவட்ட நிர்வாகம், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் உரிய ஆவணங்களை உடனடியாக டி.எஸ்.பி.யிடம் ஒப்படைக்க வேண்டும். அவர் இன்றே அதை கையில் எடுக்க வேண்டும்” என நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில்,  சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி சி.பி.சி.ஐ.டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்துள்ளது. கோவில்பட்டி கிளைச் சிறை ஆவணங்கள் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  அரசு கட்டுப்பாட்டில் இருந்தபோது மர்ம மரணம் என சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது.

click me!