விருமன் ஷூட்டிங் ஸ்பாட்டில் வீராப்பு காட்டிய ஆளும் கட்சி பிரமுகர்... ஒரே டயலாக்கில் ஓடவிட்ட இயக்குநர்..!

Published : Nov 29, 2021, 06:19 PM IST
விருமன்  ஷூட்டிங் ஸ்பாட்டில் வீராப்பு காட்டிய ஆளும் கட்சி பிரமுகர்... ஒரே டயலாக்கில் ஓடவிட்ட இயக்குநர்..!

சுருக்கம்

நடிகர் கார்த்தி குடும்பத்த பற்றி தெரியுமுல்ல. அவருக்கும், அவரது அண்ணனுக்கும் இருக்கும் செல்வாக்கு தெரியுமுல்ல...

முத்தையா இயக்கும் விருமன் படத்தில் நடித்து வருகிறார் கார்த்தி. கொம்பன் படத்தை அடுத்து இரண்டாவது முறையாக இந்தக் கூட்டணி இணைந்துள்ளனர். இந்தப் படத்தை சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து தயாரிக்கின்றனர். இந்தப் படத்தின் மூலம் இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடிக்க உள்ளார். 

மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் சமீபத்தில் இந்தப்படத்தின் சூட்டிங் நடந்த போது ஆளுங்கட்சியைச் சேர்ந்த தொண்டரணி செயலாளர் ஒருவர் தன் ஆதரவாளர்களோடு அங்கே சென்று''எங்க ஏரியாவில்'சூட்டிங்' நடக்கிறது. 15 லட்சம் ரூபாயை கொடுத்து விட்டு பட ஷூட்டிங்கை எடுத்துக் கொள்ளுங்கள் என தடாலடியாக கேட்டுள்ளார். 

அதற்கு இயக்குனர் தரப்பில், 'சூட்டிங் நடத்த மாவட்ட நிர்வாகம், மாநகராட்சியிடம் அனுமதி வாங்கி விட்டோம். ’’நடிகர் கார்த்தி குடும்பத்த பற்றி தெரியுமுல்ல. அவருக்கும், அவரது அண்ணனுக்கும் இருக்கும் செல்வாக்கு தெரியுமுல்ல...' என சொல்லி இருக்கிறார். ''கோபமான ஆளுங்கட்சி பிரமுகர், 'இப்போ போறேன்... நீங்களே வந்து பணத்தை கொடுப்பீங்க பாருங்க' என சவால் விட்டுச் சென்று இருக்கிறார். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

புது ட்விஸ்ட்..! விஜய் கூட்டணிக்கு வருவார்..! எடப்பாடி பழனிசாமி போடும் பக்கா ரூட்..! ஆட்டத்தை ஆரம்பித்த அதிமுக..!
ராஷ்ட்ரபதிபவன் விருந்தில் லெக் பீஸ் எங்கே.! கேள்வி எழுப்பிய காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம்.!