Nithyananda:இந்துக்களே சாதி விட்டு சாதி திருமணம் பண்ணாதீங்க.. இனகலப்பு கூடாது.. தலையில் அடித்து கதறும் நித்தி.

By Ezhilarasan BabuFirst Published Nov 29, 2021, 6:09 PM IST
Highlights

சாதி ஏற்றத்தாழ்வுகளை கலைய கலப்பு திருமணங்களை அரசு ஊக்குவித்து வருகிறது. கலப்பு திருமணங்கள் சாதி கட்டமைப்பில் இறுக்கத்தை தளர்த்தும் என்ற நம்பிக்கையில் இந்த தொலை நோக்கு திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

சாதிகள் கலப்பு அல்லது சாதி மாறி திருமணம் செய்வதையோ இந்துக்கள் ஒருபோதும் ஆதரிக்க கூடாது என்றும், அப்படி நடந்தால் உலகே பேரழிவுக்கு ஆட்படும் என நித்தியானந்தா கூறியுள்ளார். சாதிக்கட்டமைப்பு இந்து சமூகத்திற்கு எந்த அளவிற்கு முக்கியமோ, அதே அளவுக்கு சாதி கலப்பில்லாமல் இருக்கது அவசியம் என்றும் அவர் கூறியுள்ளார். 

பாலியல் வழக்கில் சிக்கி சின்னாபின்னமாகி ஒரு கட்டத்தில் " நான் ஒரு பொறம்போக்கு" என தன்னைத் தானே கூறிக் கொண்ட நித்தியானந்தா, தமிழகத்தை விட்டே, இல்லை இந்தியாவை விட்டே ஓடி தலைமறைவாகியுள்ளார். தற்போது அவர் கைலாசா என்னும் நாட்டில் இருப்பதாக கூறி வருகிறார். அந்நாட்டின் அதிபரும் தான்தான் என்றும், இந்து தர்மத்தையும் இந்து மதத்தையும் காப்பதற்காக அந்த நாட்டை உருவாக்கி இருப்பதாகவும் அவர் கூறி வருகிறார். ஆனால் உண்மையில் அவர் எங்கு இருக்கிறார் என்பதை யாராலும் உறுதி செய்ய முடியவில்லை.

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் புதியபுதிய கெட்டப்புகளில் தோன்றி பக்தர்களிடம் சத்சங்கம் நடத்திவருகிறார் அவர். சமீபத்தில் நவராத்திரியின்போது அவர் நடத்திய போட்டோ சூட் பேஸ்புக்கில் பகிர்ந்தார். அது சமூக வலைத்தளத்தில் வைரலானது. இப்படி ஏகப்பட்ட அலப்பறைகளை  செய்துவரும் நித்தியானந்தா பேசி வெளியிட்டுவரும் வீடியோக்கள் பெரும் பேசுபொருளாக மாறிவருகிறது. பலர் அவைகளை நகைச்சுவையாக பார்த்து ரசித்திவிட்டு கடந்து செல்கின்றனர். ஆனால் இன்னும் பலர் அவர் கூறும் கருத்துக்களை ஆமோதித்து வருகின்றனர்.

இந்நிலையில் அவர் பேசி வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக உள்ளது. அதாவது நாட்டில் உள்ள சாதிக் கட்டமைப்பை அனைவரும் பாதுகாக்க வேண்டும், மனிதச் சமூகம் சிறப்பதற்காகவே இந்த சாதியக்கட்டமைப்பை முன்னோர்கள் உருவாக்கி வைத்துள்ளனர் என்றும், அதை எவரும் சீர்குலைக்க நாம் அனுமதிக்கக்கூடாது என்றும், சாதி கட்டமைப்பு சீர்குலைந்தால் இந்து மதம் அழிந்துவிடும், எனவே இந்த சாதிக்கட்டமைப்பை ஒழிக்க திராவிட கும்பல்கள் தொடர்ந்து பகீரத முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இந்து மக்கள் இதில் கவனமாக இருக்க வேண்டும் அவர் வலியுறுத்தி உள்ளார். இது ஒருபுறம் இருக்க அவர் பேசியுள்ள மற்றொரு விஷயம் கேட்போரை அதிரவைப்பதாக உள்ளது. அதாவது சாதி கட்டமைப்பு இந்து மத த்திற்கு எவ்வளவு முக்கயமோ அதே அளவுக்கு சாதி கலப்பு இல்லாமல் இருப்பது அவசியல் என கூறியுள்ளார். அவர் அது குறித்து பேசியுள்ள முழு விவரம் பின்வருமாறு:- 

எனது பக்தர்கள், சீடர்கள், என்னை மதிப்பவர்கள் அனைவருக்கும் நான் தெளிவாக ஒன்றைச் சொல்லுகிறேன், பாரம்பரியங்களின் படிதான் நமது திருமண வாழ்க்கை அமைய வேண்டும், நமது பாரம்பரியங்களின் படி எந்தெந்த சாதிகள் யார் யாரோட திருமண உறவுகளை அமைத்துக் கொள்ளலாம் என்று வகுத்து வைக்கப்பட்டிருக்கின்றதோ தயவு செய்து அதையே  கடைப்பிடிக்க வேண்டும். சாதி மாறிய திருமணங்கள் கூடாது.  கிருஷ்ண பகவான் உலகத்திற்கு மிகப்பெரிய அழிவாக கீதையில் இதை சொல்கிறார். சாதிக் கலப்பு நிகழக்கூடாது, பயாலஜிக்கலாக அது மிகப் பெரிய இழப்பு, ஒரு தலைமுறை மனித இனம் மேலும் மேலும் ஒரு சிறந்த மசூல் மெமரி, பயோ மெமரி, பயோ எனர்ஜி, ஜெனிடிகல் ஸ்டிரக்சர். டிஎன்ஏ ஸ்டரக்சர், குண்டலினி எனர்ஜி அதனால் ஏற்படும் அவேக்கனிங், இது மாதிரியான நாம் வாழ்வதற்கு பெட்டர் அண்ட் பெட்டர் சிஸ்டமாக நாம் பரிணாம வளர்ச்சி அடைவதற்குதான் நம் முன்னோர்கள் அருமையான ஜாதி கட்டமைப்பை உருவாக்கி வைத்ததுடன், அதில் இனக்கலப்பு கூடாது என்றும் கூறுகின்றனர்.

ஆனால் திராவிட கும்பல் வேகவேகமாக புகுந்து இதுஎல்லாவற்றையும் அழைத்திருக்கிறார்கள். ஏன் என்று பார்த்தோமேயானால் அது அனைத்துமே இந்து மன அழிக்க வேண்டும் என்ற நோக்கம்தான் என்பது தெரியவரும். சிவாச்சாரியார்களை திராவிஷ கும்பல் அழிந்நது. நான் சொல்வதை சற்று பொறுமையாகவும், நிதானமாகவும் கேளுங்கள், உண்மையிலேயே சிவாச்சாரியார்களை அழித்தது  திராவிஷ கும்பல்தான். அழித்ததுபோக மீதம் இருக்கிற சிவாச்சாரியார்களின் எண்ணிக்கை மிக குறைவு, பக்தர்கள் அனைவருக்கும் நான் ஒன்று சொல்லிக் கொள்கிறேன். சிவாச்சாரியார்களுக்கு நீங்கள் கொடுக்கும் காணிக்கை சிவனுக்கே கொடுத்ததற்கு சமம். இந்த திராவிட கும்பல் சிவாச்சாரியர்களை அழித்தார்கள். அடுத்து ருத்ர கன்னியா சம்பிரதாயத்தை அழித்தார்கள்.

ருத்ர கன்னிகளை அழைத்ததனால் மொத்த சமூகத்தையும் ஒழுக்கமான சமூகமாக மாற்றி விட்டதா இந்த திராவிட கும்பல், திராவிடர்களுக்கும் ஒழுக்கத்திற்கும் என்ன சம்பந்தம். இவ்வாறு அவர் கேள்வி எழுப்பியுள்ளார். சாதி ஏற்றத்தாழ்வுகளை கலைய கலப்பு திருமணங்களை அரசு ஊக்குவித்து வருகிறது. கலப்பு திருமணங்கள் சாதி கட்டமைப்பில் இறுக்கத்தை தளர்த்தும் என்ற நம்பிக்கையில் இந்த தொலை நோக்கு திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் நித்யாணந்த பாஜக ,பாமக உள்ளிட்ட கட்சியினரை போல சாதி கலப்பு அல்லது கலப்பு திருமணங்கள் கூடாது என்று கூறியிருப்பது பலரையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது வடிகட்டிய ஆர்எஸ்எஸ் சித்தாந்த பேச்சு என பலரும் நித்யானந்தாவை கண்டித்து வருகின்றனர். 

 

click me!