புலம் பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு போக முடியாமல் அகதிகளாக அலைய யார் காரணம்.? முதல்வர் பூபேஷ் பாகேல் ....

By T BalamurukanFirst Published May 17, 2020, 9:55 PM IST
Highlights

புலம் பெயர்ந்த தொழிலாளர்களை அழைத்து வருதில் கர்நாடகம் உத்திரபிரதேசம் மாநிலங்கள் கால தாமத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் எங்கள் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களை சரியான நேரத்தில் அழைத்து வர முடியவில்லை. காலதாமத்திற்கு அந்த இரண்டு மாநில பிஜேபி  அரசுகள் தான் காரணம் எனக் குற்றம் சாட்டியிருக்கிறார் சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல்.

புலம் பெயர்ந்த தொழிலாளர்களை அழைத்து வருதில் கர்நாடகம் உத்திரபிரதேசம் மாநிலங்கள் கால தாமத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் எங்கள் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களை சரியான நேரத்தில் அழைத்து வர முடியவில்லை. காலதாமத்திற்கு அந்த இரண்டு அரசுகள் தான் காரணம் எனக் குற்றம் சாட்டியிருக்கிறார் சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல்.

கர்நாடகா அரசிடம் அனுமதி பெற 3 நாட்கள் ஆனது, இதேபோல் உத்திபிரதேசம் மாநில அரசு தாமதத்தை ஏற்படுத்துகிறது. மே 11 அன்று நாங்கள் ஜே & கே நிறுவனத்திடம் அனுமதி கோரினோம், இன்னும் அனுமதி பெறவில்லை. ரயில்வே துறை அனைத்து மாநிலங்களிலிருந்தும் இறுதிவரை ரயில்களை இயக்கியிருந்தால், புலம்பெயர்ந்தோர் நடக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்காது. அதேபோன்று,மற்ற மாநிலங்களில் சிக்கித் தவித்த சுமார் 75000 தொழிலாளர்கள் மீட்டுக் கொண்டு வரப்பட்டுள்ளனர், அவர்களில் 16000 பேர் ரயில்களிலும், சாலை வழியாக ஓய்விலும் கொண்டு வரப்பட்டனர்.2 மாநிலங்களுக்கு இடையிலான ஒப்பந்தத்திற்குப் பிறகுதான் ரயில்கள் இயக்க முடியும். இது தான் தாமதத்தை ஏற்படுத்துகிறது என்று குறிப்பிட்டுள்ளார். 


புலம் பெயர் தொழிலாளர்கள் உணவு இன்றியும் பணம் இன்றியும் தொழில்கள் முடங்கிய நிலையில் ரெம்பவே கஷ்டமான சூழ்நிலையில் மனைவி பிள்ளைகள் என தலைசுமையாக கால்நடையாகவே நடந்து வந்துகொண்டிருக்கிறார்கள். இதுபோன்று நடந்து வருபவர்கள் மாரடைப்பாலும் லாரி மோதியும் இறந்து போயிருக்கிறார்கள். உள்நாட்டிலேயே மக்கள் வாழ வழியின்றி சொந்த ஊருக்கு போக வழியின்றி செத்து போவது கொடுமையிலும் கொடுமை.இது போன்ற சம்பவங்கள் எந்த நாட்டிலும் நடக்க கூடாது. ஆனால் இந்தியாவில் இப்படியான கொடுமை அரங்கேறியிருக்கிறது.

ஊரடங்கு அறிவிக்கப்பட்டு சுமார் 50 நாட்கள் ஆனாலும் புலம் பெயர் தொழிலாளர்கள் பிரச்சனை இன்னும் முடிவுக்கு வந்தபாடில்லை. மத்திய அரசு இதற்கு முற்றுப்புள்ளி வைக்காமல் இருப்பது மாநில அரசுகளுக்கு இடையே மனவருத்தத்தை ஏற்படுத்தியிருப்பதற்கு இதுதான் காரணமாம்." கர்நாடகம் உத்திரபிரதேசம் மாநிலங்களில் பிஜேபி ஆட்சியில் இருப்பதால் வேண்டுமென்றே காங்கிரஸ் ஆளும் சத்தீஸ்கர் மாநில முதல்வரை போட்டு பார்க்கிறர்கள்.மக்கள் மத்தியில் பூபேஷ்க்கு கெட்ட பெயரை கொடுக்க வேண்டும் என்பதற்காக இதுபோன்ற காலதாமதம் செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

click me!