அடிதூள்.. கொரோனாவில் இருந்து குணமடைவோரின் விகிதம் 83.26 சதவீதமாக அதிகரிப்பு.

By Ezhilarasan BabuFirst Published May 13, 2021, 10:45 AM IST
Highlights

அதேபோல் கடந்த மாதம் வைரஸின் தாக்கம் மிகத் தீவிரமாக இருந்தது. தினமும் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் தொற்றால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த வாரம் முழுவதும் பாதிப்பின் எண்ணிக்கை நான்கு லட்சத்தை கடந்தது. 

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோர் மற்றும் உயிரிழப்போரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. இது கொரோனா இரண்டாவது அலையின் வீழ்ச்சிக்கான அறிகுறி என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா இரண்டாவது அலை இந்தியாவில் மிகத் தீவிரமாகப் பரவி வருகிறது. கடந்த மாதம் திடீரென வேகம் எடுத்த இந்த வைரஸ், அதன் உச்ச நிலையை அடைந்துள்ளது. இதனால் மக்கள் கொத்துக்கொத்தாக பாதிக்கப்பட்டு உயிரிழந்து வருகின்றனர். முதல் அலையை சமாளித்து அதிலிருந்து மீண்டு வந்த இந்தியா, இரண்டாவது அலையின் கொடூரத்தில் சிக்கிக்கொண்டது.

முதல் அலையின் போது பல்வேறு நாடுகளுக்கு மருந்து உள்ளிட்ட பொருட்களை அனுப்பி உதவி இந்தியா, இரண்டாவது அலையின் தாக்கத்தால் பல்வேறு நாடுகளின் உதவியை எதிர்பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது,  இந்தியாவில் ஏற்பட்டுள்ள இந்த வைரஸ் பெரும்பாலானோருக்கு மூச்சுத்திணறல் ஏற்படுத்தி உயிரிழக்க வைக்கிறது. இதனால் ஏராளமானோருக்கு ஆக்சிஜன் தேவை அவசியமாக மாறியுள்ளது. அதே நேரத்தில் ரெம்டெசிவர் போன்ற தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது,  மக்கள் மருந்துகளுக்காக பல நாட்கள் வரிசையில் காத்திருக்கும் அவலத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.  கடந்த ஏப்ரல் மாதம் இறுதியில் உச்சம் அடைந்த இந்த வைரஸ் மே மாத இறுதியில் வீழ்ச்சியை சந்திக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

அதேபோல் கடந்த மாதம் வைரஸின் தாக்கம் மிகத் தீவிரமாக இருந்தது. தினமும் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் தொற்றால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த வாரம் முழுவதும் பாதிப்பின் எண்ணிக்கை நான்கு லட்சத்தை கடந்தது. அதேபோல அதில் பலியானவர் எண்ணிக்கையும் பன்மடங்கு அதிகரித்தது. இதனால் தமிழகம் உள்ளிட்ட 16 மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது திடீரென வைரஸ் தொற்றின் எண்ணிக்கை  4 லட்சத்திற்கும் கீழ் குறையத் தொடங்கியுள்ளது. நேற்றைய முன்தினம் பாதிப்பு எண்ணிக்கை 3.60 லட்சமாக குறைந்தது, அதேபோல் நேற்று 3.29 லட்சமாக பாதிப்பு குறைந்தது, இது இரண்டாவது அலை பலவீனமடைந்து விட்டது என்பதற்கான அறிகுறி என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதேபோல இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைவோரின் எண்ணிக்கையும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. நாடு முழுவதும் குணமடைவோரின் விகிதம் 83.26 சதவீதமாக அதிகரித்துள்ளது. 

 

click me!