சென்னையில் நாளை நடைபெற இருந்த எடப்பாடி பழனிசாமியின் பொதுக்கூட்டம் திடீர் ரத்து- காரணம் என்ன.?

By Ajmal Khan  |  First Published Jan 18, 2024, 11:01 AM IST

எம்ஜிஆர் பிறந்தாள் பொதுக்கூட்டம் நாளை எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை ஆர்.கே.நகரில் நடைபெற இருந்த நிலையில், அந்த பொதுக்கூட்டம் திடீர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 


எம்ஜிஆர் பிறந்தாள் பொதுக்கூட்டம்

அதிமுக நிறுவனர் எம்ஜிஆரின் 107வது பிறந்தநாள் நேற்று முன் தினம் தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இதனையடுத்து அதிமுகவினர் சார்பாக பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடத்த உத்தரவிடப்பட்டது. அந்த வகையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாளை (19.1.2024) சென்னை ஆர்.கே.நகரில் கலந்து கொள்ள இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில் இந்த பொதுக்கூட்டம் திடீர் ரத்து செய்யப்பட்டுள்ளது.   இது தொடர்பாக அதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

Tap to resize

Latest Videos

கழக நிறுவனத் தலைவர், 'பாரத் ரத்னா' புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் 107-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர்  எடப்பாடி K. பழனிசாமி அவர்கள், 19.1.2024 அன்று, வட சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டம், டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற இருந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்று சிறப்புப் பேருரை ஆற்றுவார் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

பொதுக்கூட்டம் ஒத்திவைப்பு

இந்நிலையில், 19.1.2024 அன்று ஒத்திவைக்கப்பட்டு, 31.1.2024 நடைபெற இருந்த பொதுக்கூட்டம் புதன் கிழமை அன்று, டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில், கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் பங்கேற்று சிறப்புப் பேருரை ஆற்ற உள்ளார் என்பதைத் தெரிவித்துக்கொள்வதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பொதுக்கூட்டம் ரத்து செய்யப்பட்டதற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது. நாளை பிரதமர் மோடி சென்னை வரவுள்ளார். பிரதமர் மோடியின் நிகழ்ச்சி சென்னை நேரு விளையாட்டிரங்கில் நடைபெறவுள்ளது. இதனால் அந்த பகுதி முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 

மோடியால் இபிஎஸ் கூட்டம் ஒத்திவைப்பு

இந்த சூழ்நிலையில் ஆர்.கே.நகரில் எடப்பாடி பழனிசாமி பொதுக்கூட்டம் நடத்தப்படுவதால் அதிகளவு அதிமுகவினர் ஆர்.கே.நகர் பகுதிக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனை கருத்தில் கொண்டு காவல்துறை அனுமதி கொடுக்கவில்லையென கூறப்படுகிறது. இதன் காரணமாகவே பொதுக்கூட்டத்தை வெறு தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதையும் படியுங்கள்

MODI : 3 நாட்கள் பயனமாக நாளை தமிழகம் வரும் மோடி..எங்கெல்லாம் செல்கிறார்.? யாரையெல்லாம் சந்திக்கிறார்.?

click me!