இன்று தமிழகத்தில் உரை ; நாளை பிரதமருடன் சந்திப்பு..! ஆளுநரின் அடுத்தடுத்து நகர்வுகள்..! 

 
Published : Jan 08, 2018, 04:08 PM ISTUpdated : Sep 19, 2018, 01:48 AM IST
இன்று தமிழகத்தில் உரை ; நாளை பிரதமருடன் சந்திப்பு..! ஆளுநரின் அடுத்தடுத்து நகர்வுகள்..! 

சுருக்கம்

The Prime Minister will be meeting Governor Panwarilal Purohit at 5 pm tomorrow.

நாளை மாலை 5 மணிக்கு பிரதமர் மோடியை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சந்திக்க உள்ளார். இதை தொடர்ந்து நாளை மாலை 6 மணிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தையும் சந்திக்க உள்ளார்.  

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தலைமையில் இன்று கூடியது. 

சட்டப்பேரவைக்கு வந்த  ஆளுநரை சபாநாயகர் தனபால் வரவேற்றார். ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் பேரவையில் ஆளுநர் வணக்கம் புத்தாண்டு வாழ்த்துக்கள் என கூறி உரையை தொடங்கினார். 

இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர்க்கட்சிகளில் எதிர்ப்புக்கு இடையே ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையற்ற முயற்சித்தார். எதிர்க்கட்சிகள் அமைதி காக்கும்படி ஆளுநர் வேண்டுகோள் விடுத்தார். 

இந்த ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். 

இதையடுத்து எந்த எதிர்ப்பும் இன்றி பன்வாரிலால் புரோகித் உரையாற்றினார். அதில், சிறந்த நிர்வாகத்தை அரசு தொடர்ந்து வழங்கும் என்று நம்புகிறேன் என ஆளுநர் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் குடிமராமத்து பணிகளுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பாராட்டு தெரிவித்தார். 

நிதிப்பற்றாக்குறை இருந்தாலும் 7-வது ஊதியக்குழு பரிந்துரை செயல்படுத்தப்பட்டுள்ளது. சிறந்த ஆட்சி நிர்வாகத்தை அரசு தொடர்ந்து வழங்கும் என்று நம்புகிறேன் ஆளுநர் பன்வாரிலால் கூறினார். 

தமிழகத்தில் 10 இடங்களில் காய்கறிக் கிடங்கு அமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. விலையில்லா ஆடு வழங்கும் திட்டம் தொடரும் என்று ஆளுநர் உரையில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

சட்டப்பேரவை முடிந்து செய்தியாளர்களை சந்தித்த ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ டிடிவி தினகரன், அரசாங்கத்தை ஆதரிக்குமாறு கவர்னர் பேசினதே தவறு எனவும் அவர்களுக்கு பெரும்பான்மை இருக்கிறதா என்பதை தான் முதலில் கேட்டிருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். 

இந்நிலையில், நாளை மாலை 5 மணிக்கு பிரதமர் மோடியை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சந்திக்க உள்ளார். இதை தொடர்ந்து நாளை மாலை 6 மணிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தையும் ஆளுநர் சந்திக்க உள்ளார்.  
 

PREV
click me!

Recommended Stories

தேவாலயத்திற்குச் சென்று கிறிஸ்துமஸ் பிரார்த்தனையில் பங்கேற்ற பிரதமர் மோடி..!
தேர்தல் செலவுக்கு மண் திருடும் மாஃபியாக்கள்..! ஸ்வீட்பாக்ஸில் கொழிக்கும் அதிகாரிகள்..!