ஹெல்மெட்டில் காட்டாத ஆர்வத்தை கொரோனா விதிமுறைகளை மீறியவர்களிடம் காட்டிய தமிழக போலீஸ்.!! அபராதம் வசூல் ...!!

By T BalamurukanFirst Published May 21, 2020, 9:09 PM IST
Highlights

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகத்திலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மாவட்ட எல்லைகளில் தடுப்பு போடப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.     
 

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகத்திலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மாவட்ட எல்லைகளில் தடுப்பு போடப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.     


 
மக்கள் தேவையில்லாமல் கூடுவதை தவிர்க்க காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதுதவிர ஊரடங்கு விதிகளை மீறி ஊர் சுற்றுவோர் மீது வழக்கு பதிவு செய்தல், கைது செய்தல், வாகனங்களை பறிமுதல் செய்தல் ஆகிய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.   
 
ஊரடங்கு உத்தரவை மீறியதாக தமிழகத்தில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தை நெருங்க உள்ளது, ஊரடங்கு உத்தரவை மீறியதற்காக 4 லட்சத்து 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.4 லட்சத்து 98 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களிடம் இருந்து 4 லட்சத்து 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.இதுவரைக்கும்6 கோடியே 54 லட்ச ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

click me!