வி.பி.துரைசாமி கட்சிப் பதவி பறிப்பு... சாதிய திமுக மீது மக்கள் கோபம்... திமுக மீது பாஜக விமர்சனம்!

By Asianet TamilFirst Published May 21, 2020, 9:07 PM IST
Highlights

எல்.முருகனுடனான சந்திப்பால் ஏற்கனவே அதிருப்தியில் இருந்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், இந்த விளக்கம் இன்னும் கோபத்தை அதிகரித்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து திமுக துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து வி.பி.துரைசாமியை நீக்கி மு.க. ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார். அவருக்குப்  பதிலாக அந்தியூர் செல்வராஜை திமுக துணை பொதுச்செயலாளராக நியமித்தும் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். 

திமுக துணை பொதுச்செயலாளர் பதவியிலிருந்து வி.பி. துரைசாமி நீக்கப்பட்ட விவகாரத்தில் சாதிய திமுக மீது மக்கள் கடும் கோபம் கொண்டுள்ளதாக பாஜக விமர்சித்துள்ளது.
திமுக துணைப் பொதுச்செயலாளரும், முன்னாள் துணை சபாநாயகருமான வி.பி.துரைசாமி, தமிழக பாஜக தலைவர் எல்.முருகனை கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு சந்தித்து பேசினார். இதனால், அவர் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாயின. இந்நிலையில் இந்தச் சந்திப்பு குறித்து இன்று விளக்கம் அளித்த வி.பி.துரைசாமி, “தமிழக பாஜக தலைவர் முருகனும், நானும் ஒரே சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள். அந்த வகையில் அவருக்கு வாழ்த்து சொல்லத்தான் சந்தித்தேன். இது அரசியல் ரீதியிலான சந்திப்பே இல்லை. பிராமணர் கட்சியில் அருந்ததியருக்கு தலைவர் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதை வாழ்த்தப்போனால் என்ன தவறு?” என்று கூறியிருந்தார்.
எல்.முருகனுடனான சந்திப்பால் ஏற்கனவே அதிருப்தியில் இருந்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், இந்த விளக்கம் இன்னும் கோபத்தை அதிகரித்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து திமுக துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து வி.பி.துரைசாமியை நீக்கி மு.க. ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார். அவருக்குப்  பதிலாக அந்தியூர் செல்வராஜை திமுக துணை பொதுச்செயலாளராக நியமித்தும் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். மு.க. ஸ்டாலினின் இந்த முடிவால் அதிருப்தி அடைந்த வி.பி.துரைசாமி, “3 நாட்களில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து கூறுவேன்.” என்று  தெரிவித்துள்ளார்.

 
இதற்கிடையே விபி துரைசாமியின் பதவி பறிப்புக்கு பாஜக செய்தித் தொடர்பாளர் திருப்பதி நாராயணன் தனது ட்விட்டர் பதிவில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “பாஜக தலைவர் முருகனை சந்தித்த பின் திமுகவிலிருந்து வி.பி. துரைசாமி நீக்கம். சாதிய திமுக மீது மக்கள் கடும் கோபம்.” என்று திருப்பதி நாராயணன் தெரிவித்துள்ளார்.

click me!