போலீஸ் ஆகியும் திருநங்கைக்கு பாதுகாப்பு இல்ல.. காவலர் சுபஸ்ரீயிடம் தகாத முறையில் நடந்துகொண்ட சக போலீஸ்.

By Ezhilarasan BabuFirst Published Jul 20, 2021, 1:30 PM IST
Highlights

அவர்கள் சுபஸ்ரீயைப் பார்த்ததும், அவரிடம் வந்து மிக மோசமான வார்த்தைகளை கூறி தவறான முறையில் நடந்து கொள்ள  முற்பட்டனர். சுபஸ்ரீயின் உடலில் தகதாக இடங்களில்  கைவைத்து தவறாக நடந்து கொண்டனர். உடனே அவர்களைத் தடுத்து  தானொரு காவலர் என சுபஸ்ரீ எச்சரித்துள்ளார். ஆனால் அதையும் பொருட்படுத்தாத அவர்கள், 

தான் போலீஸ் என்று கூறிய பின்னரும் காவலரான திருநங்கையிடம் தகாத முறையில் நடந்துகொண்ட சக காவலர் உட்பட இருவர் மீது சென்னை அமைந்தகரை காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த காவலர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆண், பெண் என்ற பாலின ஏற்றத்தாழ்வு மிக்க இந்த சமூகத்தில் திருநங்கைகள் எனப்படும் மூன்றாவது பாலினத்தவர்கள் மிக மோசமாகவும், இழிவாகவும் நடத்தப்படும் சூழல் நிலவுகிறது. இதை தடுக்க அரசு பல்வேறு சட்டதிட்டங்களை எடுத்து வருவதுடன், மூன்றாம் பாலினத்தவர்கள் தலைநிமிரும் வகையில் சலுகைகளையும், திட்டங்களையும் அறிவித்து வருகிறது. எத்தனையோ திறமைகள் இருந்தும் பல இடங்களில் பாலின மாறுபாட்டால் திருநங்கைகள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர்.  ஆனாலும் இத்தகைய பல தடைகளையும் தாண்டி கடந்த 2018 ஆம் ஆண்டு தமிழகத்தில் முதல்முறையாக தனது அயராத உழைப்பால் சுபஸ்ரீ என்ற திருநங்கை இரண்டாம் நிலை காவலராக பணியில் சேர்ந்தார். 

பலருக்கும் அவர் முன்மாதிரியாக இருந்து செயல்பட்டு வருகிறார். தற்போது அவர் நுங்கம்பாக்கம் காவல் நிலைய சட்டம் ஒழுங்கு காவலராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு உணவு வாங்குவதற்காக அண்ணா ஆர்ச் அருகே பி எச் சாலையில் உள்ள உணவகம் ஒன்றில் உணவு வாங்க காத்திருந்தார். அப்போது அங்கு  மூன்று பேர் குடிபோதையில் இருந்தனர். அவர்கள் சுபஸ்ரீயைப் பார்த்ததும், அவரிடம் வந்து மிக மோசமான வார்த்தைகளை கூறி தவறான முறையில் நடந்து கொள்ள  முற்பட்டனர். சுபஸ்ரீயின் உடலில் தகதாக இடங்களில்  கைவைத்து தவறாக நடந்து கொண்டனர். உடனே அவர்களைத் தடுத்து  தானொரு காவலர் என சுபஸ்ரீ எச்சரித்துள்ளார். ஆனால் அதையும் பொருட்படுத்தாத அவர்கள், 

' ஏ நாங்களும் போலீஸ் தான்'   நான் அமைந்தக்கரை போலீஸ்...  உன்னால் முடிந்ததை பார்த்துக் கொள்.  என தரக்குறைவாக பேசியுள்ளனர். உடனே அந்த இடத்திலிருந்து விலகி வந்த சுபஸ்ரீ தனக்கு ஏற்பட்ட அவமானம் குறித்து அமைந்தகரை காவல் நிலைத்தில் அந்த நபர்கள் மீது புகார் கொடுத்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்ததில் சுபஸ்ரீயிடம் தகாத முறையில் நடந்து கொண்டவர் அமைந்தகரை சட்டம் ஒழுங்கு காவல் பிரிவில் பணியாற்றும் கணேசன் என்பது தெரிந்தது. அவர் மீது துறை ரீதியாக விசாரணை  நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் அப்போது சுபஸ்ரீயிடம் புகார் அளித்தனர். மேலும் காவலர் கணேசனுடன் இருந்த இருவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வந்தனர்.

 

click me!