இது காட்டுமிராண்டித்தனமானது; நீங்க தோத்து போயிட்டீங்க...! ரஜினி காட்டம்

Asianet News Tamil  
Published : May 23, 2018, 02:49 PM ISTUpdated : Sep 19, 2018, 02:24 AM IST
இது காட்டுமிராண்டித்தனமானது; நீங்க தோத்து போயிட்டீங்க...! ரஜினி காட்டம்

சுருக்கம்

The police action is barbaric - Rajini Kanth

காவல்துறையின் மிருகத்தனமான செயலை வன்மையாக கண்டிப்பதாகவும், தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவம் தமிழக அரசு உளவுத்துறையின் தோல்வியைக் காட்டுவதாகவும் நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி தூத்துக்குடி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று 100-வது நாளில் நடந்த போராட்டத்தின்போது, பயங்கர கலவரம் ஏறப்ட்டது. போலீஸ் வாகனம் உட்பட பல்வேறு வாகனங்கள் எரிக்கப்பட்டன. ஆட்சியர் அலுவலகங்கள் சூறையாடப்பட்டன. 

இந்த கலவரத்தின் இறுதியில், ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு பலர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

மு.க.ஸ்டாலின், கமல ஹாசன், திருநாவுக்கரசர், தொல் திருமாவளவன் உள்ளிட்ட பலர் தூத்துக்குடி சென்று அங்கு பாதிக்கப்பட்ட மக்களின் குறைகளைக் கேட்டனர். போலீசாரின் கண்மூடித்தனமான தாக்குதலுக்கு அவர்கள் கண்டனமும் தெரிவிதது வருகின்றனர்.

தூத்துக்குடி சம்பவம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த சம்பவம் குறித்து கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில், துப்பாக்கிசூடு சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், தூத்துக்குடி சூப்பாக்கிசூடு சம்பவம், தமிழக அரசு, உளவுத்துறையின் தோல்வியைக் காட்டுகிறது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில், தமிழக அரசு அலட்சியமாக செயல்படுவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

காவல் துறையின் மிருகத்தனமான செயலை வன்மையாக கண்டிப்பதாகவும், துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு இரங்கலையும் ரஜினி தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

அரசு ஊழியர்களை கைவிட மாட்டோம்.. சட்டப்பேரவையில் வாக்குறுதி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்!
விசில் போடு.. தவெக தேர்தல் சின்னம் இதுதான்.. தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!