ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக குரல் கொடுத்த போலீஸ்...! - லேட்டாக விசாரணை வளையத்திற்குள் இழுத்த மேலிடம்...

Asianet News Tamil  
Published : Nov 14, 2017, 03:55 PM ISTUpdated : Sep 19, 2018, 01:26 AM IST
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக குரல் கொடுத்த போலீஸ்...! - லேட்டாக விசாரணை வளையத்திற்குள் இழுத்த மேலிடம்...

சுருக்கம்

The police action has been taken on the police fraud that supported the Jallikattu struggle in Chennai Marina.

சென்னை மெரினாவில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டதை ஆதரித்த காவலர் மாயழகு மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

கடந்த ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மொத்த தமிழகமும் போராட்டத்தில் குதித்தது. மாணவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள், குழந்தைகள், பெண்கள், என அனைவரும் தமிழக அரசுக்கு எதிராகவும் பீட்டா அமைப்புக்கு எதிராகவும் குரல் கொடுத்தனர். 

அப்போது முதலமைச்சராக இருந்த பன்னீர்செல்வம் அவசர சட்டத்தை பிறப்பித்து மத்தியில் அனுமதி வாங்கினார். 

இதனிடையே ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பல்வேறு தரப்பினரும் குரல் கொடுத்து வந்தனர். அந்த வகையில் போராட்டத்தில் நடத்தியவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் வகையில் ஏராளமான போலீசார் மெரினாவில் குவிக்கப்பட்டனர். 

அப்போது ஜல்லிகட்டுப் போராட்டத்தின் போது ஆதரவாக பேசியவர்  காவலர் மாயழகு. இவர் இளைஞர்களின் போராட்டத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்து தமிழக அரசுக்கு எதிராக பல கேள்விகளை எழுப்பினார். 

இதனால் ஜல்லிக்கட்டு போராட்ட அரங்கமே அதிர்ந்தது. இந்நிலையில், ஜல்லிக்கட்டு போராட்டதை ஆதரித்த காவலர் மாயழகு மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

விசாரணை முடியும் வரை ஆயுதப்படை காவலர் மாயழகுக்கு பதவி, ஊதிய உயர்வு கிடையாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

Vijay - Sangeetha: மாறும் அரசியல் களம்.! விஜய்க்காக வாக்கு சேகரிக்க வரும் சங்கீதா.?! தளபதிக்காக களம் இறங்கிய குடும்ப உறவுகள்.!
தமிழகத்தில் NDA ஆட்சி உறுதி.. திமுக கொள்ளை கும்பல் தூக்கியெறியப்படும்.. மதுரையில் கர்ஜித்த பிரதமர் மோடி!