
ஒரு செயற்கையான திட்டமிட்ட நெருக்கடி நிலை நம் மீது திணிக்கப்படுவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
அம்பேத்கரின் 125 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் விருதுகள் வழங்கப்பட்டன.
அதில், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமிக்கு அம்பேத்கர் சுடர் விருதும், பெரியார் ஒளி விருது ஓவியாவுக்கும் வழங்கப்பட்டது.
அயோத்திதாசர் ஆதவன் விருது கலி.பூங்குன்றனுக்கு வழங்கப்பட்டது.
காமராஜர் கதிர் விருது ஹென்றி தியாகராஜனுக்கு தரப்பட்டது. காயிதேமில்லத் பிறை விருது தர்வேஸ் ரசீத்துக்கு வழங்கப்பட்டது.
செம்மொழி ஞாயிறு விருது இளங்குமரனாருக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வழங்கப்பட்டது. மேலும், விருதுகளுடன், 50 ஆயிரம் ரூபாய் மதிப்புடைய பொற்கிளிகளும் வழங்கப்பட்டன.
இந்த விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:
ஒரு செயற்கையான திட்டமிட்ட நெருக்கடி நிலை நம் மீது திணிக்கப்படுகிறது.
தமிழக அரசியல் சூழல் மிகுந்த கவலைக்கு உரியதாக மாறி வருகிறது.
சாதிய - மதவாத ஆபத்திலிருந்து மக்களை காப்பாற்ற ஓரணியில் திரள வேண்டும்.
இந்திய அளவில் இடது சாரிகள் துணிந்து முடிவெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
உத்தரபிரதேஷ ஆட்சி மாற்றம் இந்திய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.