தமிழருவி மணியன் போய் சேரும் இடம் தேறாது.! அவர் பேச்சைக்கேட்டால் ரஜினி ஜீரோ தான். கார்த்திசிதம்பரம் .!!

Published : Mar 11, 2020, 08:07 AM IST
தமிழருவி மணியன்  போய் சேரும் இடம்  தேறாது.!  அவர்   பேச்சைக்கேட்டால்  ரஜினி ஜீரோ தான். கார்த்திசிதம்பரம்  .!!

சுருக்கம்

தமிழருவி மணியன் சேரும் அணி எப்போதும் தேறாது.அவரது ஆலோசனைப்படி எனது நண்பர் ரஜினி செயல்பட்டால் அது தோல்வியிலேயே முடியும் என்று ரஜினியை கலாய்த்தார் கார்த்திசிதம்பரம்.

T.Balamurukan
தமிழருவி மணியன் சேரும் அணி எப்போதும் தேறாது.அவரது ஆலோசனைப்படி எனது நண்பர் ரஜினி செயல்பட்டால் அது தோல்வியிலேயே முடியும் என்று ரஜினியை கலாய்த்தார் கார்த்திசிதம்பரம்.

சிவகங்கை எம்பி கார்த்திசிதம்பரம் சிவகங்கையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.அப்போது  பேசியவர்..'
தமிழருவி மணியன் சேரும் அணி எப்போதும் தேறாது. ஏனென்றால் அவரது ராசி அப்படி. மேலும் அவரது ஆலோசனைப்படி எனது நண்பர் ரஜினி செயல்பட்டால் அது தோல்வியிலேயே முடியும்.

இந்திய மக்களை பாதித்த பண மதிப்பிழப்பு நடவடிக்கை, குடியுரிமை திருத்தச் சட்டம் போன்றவற்றை ஆதரித்தவர் ரஜினி. அவரது கடந்த கால கருத்துகளை ஆராய்ந்து பார்த்தால் அவர் முழுக்க, முழுக்க பாஜக ஆதரவாளர் என்பது தெரியும். அந்த எண்ணத்தை மக்களிடம் மாற்றவே முஸ்லிம் உடனான சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.ரஜினிகாந்த், கட்சி, கொள்கைகளை வெளியிட்ட பிறகே அவரை இன்னும் அரசியல் ரீதியாக விமர்சிக்க முடியும். ஆனால், தமிழகத்திற்கு மேலும் புதிய கட்சிகள் தேவையில்லை.பிரதமர், பெண்களிடம் ட்விட்டர் கணக்கை ஒப்படைத்தது ஒரு விளம்பர உத்திதான். உண்மையிலேயே அக்கறை இருந்தால் நாடாளுமன்றம், சட்டப்பேரவையில் பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீடை கொண்டு வரலாம்.இவ்வாறு அவர் பேசினார்.

PREV
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!