ஜிகே.வாசனுக்கு எம்பி சீட் கிடைக்க யார் காரணம்..!! கப்பல்துறை அமைச்சராகும் வாசன்.! அதிர்ச்சியில் அதிமுக.!!

By Thiraviaraj RMFirst Published Mar 11, 2020, 12:41 AM IST
Highlights

காங்கிரஸ் கட்சிக்கு, தமிழகத்தில் பதிலடி கொடுக்க வாசனை பயன்படுத்த பாஜக திட்டமிட்டிருக்கிறது. ப.சிதம்பரத்துக்கு போட்டியாக தமிழகத்தில் பிரச்சாரம் செய்யவும், காங்கிரஸ் கட்சி   மற்றும்  சிதம்பரத்தின் தில்லுமுள்ளுகளையும் வெளிச்சத்துக்கு கொண்டுவர வாசனால் தான் முடியும்.காங்கிரஸ் பற்றி எல்லா விசயங்களும் பாஜகவிற்கு தெரிந்தாலும் பாஜக சொன்னால் மக்கள் மத்தியில் எடுபடாது.இதையெல்லாம் மனதில் வைத்து தான் ஜிகே .வாசனுக்கு எம்பி சீட் கிடைத்திருக்கிறது என்கிறார்கள் தமாகவினர்.
 

T.Balamurukan
காங்கிரஸ் கட்சிக்கு, தமிழகத்தில் பதிலடி கொடுக்க வாசனை பயன்படுத்த பாஜக திட்டமிட்டிருக்கிறது. ப.சிதம்பரத்துக்கு போட்டியாக தமிழகத்தில் பிரச்சாரம் செய்யவும் காங்கிரஸ் கட்சி, சிதம்பரத்தின் தில்லுமுள்ளுகளையும் வெளிச்சத்துக்கு கொண்டுவர வாசனால் தான் முடியும்.காங்கிரஸ் பற்றி எல்லா விசயங்களும் பாஜகவிற்கு தெரிந்தாலும் பாஜக சொன்னால் மக்கள் மத்தியில் எடுபடாது.இதையெல்லாம் மனதில் வைத்து தான் ஜிகே .வாசனுக்கு எம்பி சீட் கிடைத்திருக்கிறது என்கிறார்கள் தமாகவினர்.

ராஜ்யசபா எம்பி தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. தமிழகத்தில் காலியாகும் ஆறு மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு மார்ச் 26- ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. மாநிலங்களவை தேர்தலில் அதிமுக சார்பில் அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான  கே.பி.முனுசாமி, முன்னாள் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதனை அதிமுக தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

 முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,  துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரை சந்தித்து மாநிலங்களவை சீட் வழங்க தேமுதிகவின் எல்.கே.சுதீஷ் கோரியிருந்தார். பிரேமலதா, 'கூட்டணி தர்மம் காக்கப்படவேண்டும், எங்கள் தயவால் இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றது என்றெல்லாம் இறங்கிப்பேசியும் பார்த்தார் , ஏறிப்பேசியும் பார்த்தார்'.ஆனால் அதிமுக தரப்பிலோ, நல்ல பெண் இருந்தால் நாளுபேரு கேட்டு வரத்தான் செய்வார்கள் என்று பேட்டியளித்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி.பா.மகவுக்கு ஒரு சீட் உறுதி செய்யப்பட்ட  நிலையில் ,அதிமுக அமைச்சர்கள் டெல்லி சென்று வந்ததும் நிலமை தலைகீழாக மாறியது.


தேமுதிக,பாமக ஆகிய இரண்டு கட்சிகளும், அதிமுக மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள்.

 அதிமுக தலைமை, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசனுக்கு சீட் வழங்கியிருக்கிறது. இதன்பின்னணியில், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் பாஜகவில் இணையபோகிறார் என்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. 
இந்த நிலையில் தனக்கு ராஜ்யசபா சீட் கிடைத்தது குறித்தும், பாஜகவில் இணைவது குறித்தும் ஜி.கே.வாசன் பத்திரிகைகளுக்கு அளித்து வரும் பேட்டியில்," மாநிலங்களவையில் தமாகாவுக்கு ஒரு இடம் தரவேண்டும் என்று அதிமுகவினரிடம் வாய்ப்பு கிடைக்கும் நேரத்தில் எல்லாம் கூறி வந்தோம். மாநிலங்களவைகளுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், மீண்டும் அதிமுகவிடம் கோரிக்கை வைத்தோம். ஆனால் நாங்கள் எந்த நிபந்தனையும் அதிமுகவிடம் விதிக்கவில்லை. எங்களது கோரிக்கையை ஏற்று அதிமுக மாநிலங்களவை எம்பி பதவியை கொடுத்துள்ளது. இதற்காக மகிழ்ச்சியும் நன்றியும் அதிமுகவிற்கு தெரிவித்துக் கொள்கிறேன். 

இதுகுறித்து வாசன் மனசாட்சிகளிடம் பேசினோம்..," தேசிய அரசியல் செய்யும் அனுபவம்  அதிமுக கூட்டணியில் யாருமில்லை, அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சிக்கு அந்த கட்சியில் இருந்து வந்த அனுபவம் மிக்க ஒருவர் என்றால் அது வாசன் தான். மூப்பனார் இருந்த போது தமாக ஆரம்பித்து தமிழகத்தில் மாபெரும் அரசியல் அதிர்வை சைக்கிள் சின்னம் தந்தது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு பாஸாக வேண்டுமானால் வாசன் தேவை. பாஜக தமிழ்நாட்டில் தற்சமயம் எடுபடாது என்பது பாஜகவிற்கு தெரியும். அதனால் தான் ரஜினி,வாசன் போன்றவர்களை கையில் எடுத்திருக்கிறது பாஜக.

காங்கிரஸ் கட்சிக்கு, தமிழகத்தில் பதிலடி கொடுக்க வாசனை பயன்படுத்த பாஜக திட்டமிட்டிருக்கிறது. ப.சிதம்பரத்துக்கு போட்டியாக தமிழகத்தில் பிரச்சாரம் செய்யவும் காங்கிரஸ் கட்சி, சிதம்பரத்தின் தில்லுமுள்ளுகளையும் வெளிச்சத்துக்கு கொண்டுவர வாசனால் தான் முடியும். எல்லா விசயங்களும் பாஜகவிற்கு தெரிந்தாலும் பாஜக சொன்னாலும் மக்கள் மத்தியில் எடுபடாது.இதையெல்லாம் மனதில் வைத்து தான் எம்பி சீட் கிடைத்திருக்கிறது.

 அவசரமாக தமிழக அமைச்சர்கள் டெல்லிக்கு எதுக்கு போனாங்க. எங்க அனுமதியில்லாமல் வேட்பாளர் பட்டியல் வெளியிடக்கூடாது என்று அமித்ஷா கடுமையாக எச்சரித்து அனுப்பினார். டெல்லி உத்தரவு மட்டும் இல்லாவிட்டால் எங்களுக்கு சீட் கிடைத்திருக்க வாய்ப்பு இல்லை. அதிமுக, பாமகவிற்கு எம்.பி சீட் கொடுத்திருப்பார்கள். கூட்டணி மந்திரி சபையில் அதிமுக, தமாக ஆகிய கட்சிகள் மத்திய அரசில் இடம் பெறுவது உறுதி. அந்த வகையில் வாசன் மீண்டும் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் ஆகிறார். சட்டமன்றத்தேர்தலில் தமாக அதிக இடங்களில் போட்டியிடும். தமாக பாஜகவோடு இணைக்கும் ஐடியா வாசனுக்கு இல்லை.

பாமக பாஜகவிற்கு எதிராக போகாது. அதையும் மீறினால் அன்புமணி மத்திய அமைச்சராக இருந்த போது மருத்துவகல்லூரிகளுக்கு வழங்கிய சான்றிதழ் விவகாரம் தலைக்கு மேல் தொங்கி கொண்டிருக்கிறது.அந்த ஆயுதம் பாஜக கையில்....!!
 
 

click me!