கொரோனா விஷயத்தில் தமிழக மக்கள் அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.. பன்வாரிலால் புரோகித் கோரிக்கை.

By Ezhilarasan BabuFirst Published Sep 10, 2021, 1:18 PM IST
Highlights

பல வளர்ந்த நாடுகளை காட்டிலும் இந்தியா கொரோனாவை  சிறப்பாக எதிர்கொண்டு அதை கட்டுப்படுத்தியுள்ளது என்றும், அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு தந்து தங்களைப் வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும் எனவும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கூறியுள்ளார். 

பல வளர்ந்த நாடுகளை காட்டிலும் இந்தியா கொரோனாவை  சிறப்பாக எதிர்கொண்டு அதை கட்டுப்படுத்தியுள்ளது என்றும், அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு தந்து தங்களைப் வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும் எனவும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் இருந்து விடைபெற்று பஞ்சாப் மாநில ஆளுநராக பொறுப்பேற்க இருக்கும் பன்வாரிலால் புரோகித் சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் பிளான்ட் மற்றும் கொரோனா படுக்கை வசதிகள் கொண்ட வார்டை துவக்கி வைத்தார். 

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர் கூறியதாவது, பிற நாடுகளைவிட கொரோனாவை மிகச் சிறப்பாக இந்தியா கையாண்டுள்ளது. கொரோனா தாக்குதலால் மிகப்பெரிய சவாலை நாடு எதிர்கொண்டது. கொரோனாவை எதிர்கொள்ளும் வகையில் மக்களை பாதுகாக்க சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்கள் முன் களப்பணியாளர்களுக்கு என்னுடைய  பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன், வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு மக்கள் முழு ஒத்துழைப்புக் கொடுத்து தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும்.  நாட்டை கொரோனா இரண்டாவது அலை மிகக் கடுமையாக தாக்கியது. 

ஆனால் இரண்டாவது அலையின் போது தமிழகத்தில் தனியார்  மருத்துவமனைகளின் பங்களிப்பு மிகச் சிறப்பாக இருந்தது, தற்போது 3வது அலை ஏற்படக்கூடும் என எச்சரிக்கைகள் வந்து கொண்டிருக்கிறது, இந்நிலையில் முதியோர்கள்  அதிக அளவில் தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். ஒட்டுமொத்தமாக கொரோனாவை  தடுப்பூசியின் மூலம் நாம் எதிர்கொள்ள முடியும், எனவே அனைவரும் 100% தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் முனைப்பு காட்ட வேண்டும். பிற நாடுகளைக் காட்டிலும் நம் நாட்டில்தான் கொரோனாவில் இருந்து மீண்டு வருவோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதேபோல் இறப்பும் குறைவாக உள்ளது என்றார். கொரோனா விஷயத்தில் தமிழக மக்கள் அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

 

click me!