கரூரில் விநாயகர் சிலைகளை உடைத்த போலீஸார்..? பொங்கியெழுந்த ஹெச்.ராஜா..!

Published : Sep 10, 2021, 01:03 PM IST
கரூரில் விநாயகர் சிலைகளை உடைத்த போலீஸார்..? பொங்கியெழுந்த ஹெச்.ராஜா..!

சுருக்கம்

பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, கரூரில் விநாயகர் சிலைகளை உடைத்த அதிகாரியை தமிழக டிஜிபி உடனடியாக சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.  

உலகம் முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டு வரும் நிலையில் கரூரில் போலீஸார் விநாயகர் சிலைகளை உடைத்ததாக பாஜக தலைவர்களுல் ஒருவரான எச்.ராஜா குற்றம் சாட்டியுள்ளார்.

இன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டு வரும் நிலையில் கொரோனா காரணமாக பல்வேறு மாநிலங்களிலும் பொதுவெளியில் சிலைகள் வைத்து வழிபட தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இந்தத் தடை உள்ள நிலையில் நேற்று இரவு கரூரில் சிலர் அனுமதி இல்லாமல் விநாயகர் சிலையை கூட்டமாக எடுத்து சென்றதாகவும், அதை போலீஸார் தலையிட்டு தடுத்தபோது ஏற்பட்ட தகராறில் சிலையின் சில பகுதிகள் சேதம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, கரூரில் விநாயகர் சிலைகளை உடைத்த அதிகாரியை தமிழக டிஜிபி உடனடியாக சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

ஸ்டாலின் ரெடியாக இருங்க.. அடுத்த டார்கெட் தமிழ்நாடு தான்.. பிரதமர் மோடி மண்ணில் அமித்ஷா சபதம்!
ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!