வேலை பார்த்த சம்பளம் கேட்ட பெண் ஊழியர்... தர மறுத்து நாயை விட்டு கடிக்கவிட்ட உரிமையாளர்..!

Published : Jul 08, 2020, 03:46 PM IST
வேலை பார்த்த சம்பளம் கேட்ட பெண் ஊழியர்... தர மறுத்து நாயை விட்டு கடிக்கவிட்ட உரிமையாளர்..!

சுருக்கம்

பார்த்த வேலைக்கு முறையாக சம்பளம் கேட்ட பெண் ஊழியரை நாயை விட்டு கடிக்க விட்ட உரிமையாளரால் அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.   

பார்த்த வேலைக்கு முறையாக சம்பளம் கேட்ட பெண் ஊழியரை நாயை விட்டு கடிக்க விட்ட உரிமையாளரால் அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. 

டெல்லியில் கிர்கி எக்ஸ்டென்சன் பகுதியில் ஆயுர்வேத ஸ்பா சென்டர் நடத்தி வருபவர் நிகிதா. இங்கு வேலை செய்த சப்னா ஜனவரி முதல் ஊரடங்கு அமலாவதற்கு முன் வேலை செய்ததற்கான ஊதியத்தை கேட்டுள்ளார். ஆனால், நிகிதா மறுக்கவே வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, நிகிதா தனது வளர்ப்பு நாயை விட்டு சப்னாவை கடிக்க தூண்டியுள்ளார். சப்னாவை நாய் கடித்து குதறியதில் முகத்தில் 15 தையல்கள் போடும் அளவிற்கு காயம் ஏற்பட்டது.

இதனையடுத்து எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சப்னா, ஜுன் 11-ம் தேதி டெல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால், இந்த புகார் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில் நிகிதா தலைமறைவாகிவிட்டார். இந்த நிலையில் சில தன்னார்வ அமைப்புகள் இந்த சம்பவம் குறித்து தலையிட்டதால் அழுத்தம் அதிகரித்ததை தொடர்ந்து, 20 நாட்கள் கழித்து போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தினர். இந்த நிலையில், நிகிதா நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிகிதா தற்போது சிறையில் கம்பி எண்ணிக்கொண்டு இருக்கிறார். 

PREV
click me!

Recommended Stories

பா.ஜ.க.வில் திடீர் நடவடிக்கை.! நடந்தது என்ன? கருப்பு முருகானந்தம் கொடுத்த ஷாக் விளக்கம்!
Vijay vs Stalin: இடைத்தேர்தலை புறக்கணிக்கும் திமுக.! முன் வைத்த காலை பின் வைக்கிறதா?! மீண்டும் மேலே பறக்கும் விசில் கொடி.!