ஓபிஎஸ்,எடப்பாடி பதவி தான் போலியானது; நான் போலி அல்ல: கேசி.பழனிச்சாமியின் அடுத்த அட்டாக் இது தானாம்..!!

By Thiraviaraj RMFirst Published Feb 13, 2020, 10:11 AM IST
Highlights


அதிமுகவில் இருந்து கொண்டே யாருக்கும் அஞ்சாமல் அஞ்சாநெஞ்சனாக அதிமுக-வை ஆட்டிப்படைத்தவர் தான் கே.சி.பழனிசாமி.அதிமுகவில் சசிகலா பொதுச்செயலாளர் ஆனதை எதிர்த்து ,தொண்டர்கள் தான் பொதுச்செயலாளரை தேர்வு செய்ய வேண்டும் என்று எதிர்ப்பு தெரிவித்தவர்;அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் பதவி கிடையாது என்று கூறி தேர்தல் ஆணையம்,நீதிமன்றம் வரைக்கும் சென்று குடைச்சல் கொடுத்து வருபவர் தான் இந்த பழனிச்சாமி. இவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் ,அதிமுக கொடி,இணையதளம் பயன்படுத்தியதாக அவர் மீது வழக்கு போடப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.அவர் இன்று ஜாமினில் வெளியே வர இருக்கிறார்.

By: T.Balamurukan

  அதிமுகவில் இருந்து கொண்டே யாருக்கும் அஞ்சாமல் அஞ்சாநெஞ்சனாக அதிமுக-வை ஆட்டிப்படைத்தவர் தான் கே.சி.பழனிசாமி.அதிமுகவில் சசிகலா பொதுச்செயலாளர் ஆனதை எதிர்த்து ,தொண்டர்கள் தான் பொதுச்செயலாளரை தேர்வு செய்ய வேண்டும் என்று எதிர்ப்பு தெரிவித்தவர்;அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் பதவி கிடையாது என்று கூறி தேர்தல் ஆணையம்,நீதிமன்றம் வரைக்கும் சென்று குடைச்சல் கொடுத்து வருபவர் தான் இந்த பழனிச்சாமி. இவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் ,அதிமுக கொடி,இணையதளம் பயன்படுத்தியதாக அவர் மீது வழக்கு போடப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.அவர் இன்று ஜாமினில் வெளியே வர இருக்கிறார்.

ஈரோடு மாவட்டம், சென்னிமலையை சேர்ந்தவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமி. இவர் எம்.ஜி.ஆர். காலத்து அரசியல்வாதி.  கோவை ஆர்.எஸ்.புரம் லாலிரோடு பகுதியில் வசித்து வரும் இவர்,  கடந்த 1989ம் ஆண்டு நாமக்கல்லின் திருச்செங்கோடு தொகுதியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படார்.
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், சசிகலாவை அ.தி.மு.க. பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்ததற்கு இவர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அத்துடன் பொதுச்செயலாளரை தொண்டர்கள் தான் தேர்வு செய்ய வேண்டும். நிர்வாகிகள் தேர்வு செய்தது செல்லாது என்றும் கருத்துதெரிவித்து கடுமையாக அதை எதிர்த்தார்.

 அ.தி.மு.க.வில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி கிடையாது. அதை ரத்து செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது. இதற்கிடையில்அ.தி.மு.க.வில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி தொடர்பாக டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். அ.தி.மு.க. இரண்டு அணியாக பிரிந்து பின்னர் ஒன்றாக சேர்ந்த பின்பு கே.சி.பழனிசாமிக்கு கட்சியில் செய்தி தொடர்பாளர் பதவி வழங்கப்பட்டது. தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர், மத்திய அரசுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிப்போம் என கருத்து தெரிவித்திருந்தார்.

இதன்காரணமாக, கட்சியின் கட்டுப்பாட்டை மீறி அவர் அந்த கருத்தை கூறியதாகச் சொல்லி கடந்த 2018ம் ஆண்டு மார்ச் மாதம் 16ந்தேதி கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.எப்படியாவது கட்சியில் இருந்து பழனிச்சாமியை நீக்க வேண்டும் என்று துடித்தவர்களுக்கு இது வாய்ப்பாக அமைந்தது. சில நாட்களில் அவர் மீண்டும் கட்சியில் இணைந்ததாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியானது. ஆனால் இந்த தகவலை அ.தி.மு.க. தலைமை மறுத்தது. இந்த நிலையில் கே.சி.பழனிசாமி தனியாக இணையதளம் தொடங்கி அதில் தான் அ.தி.மு.க.வில் தொடர்ந்து இருப்பது போல் காண்பித்து வந்ததாக சொல்லப்படுகிறது.

 அ.தி.மு.க. லெட்டர் பேடு, இரட்டை இலை சின்னம் ஆகியவற்றுடன் ஃபேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தனது கருத்துகளை பதிவிட்டு வந்ததாக தெரிகிறது. இதனைத்தொடர்ந்து கோவை முத்துகவுண்டன் புதூர் ஊராட்சிமன்றத் தலைவர் வி.பி.கந்தவேல், சூலூர் போலீசில் கே.சி.பழனிசாமி மீது புகார் அளித்தார்.அந்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்,அதன் பிறகு கடந்த ஜனவரி 25ந்தேதி கே.சி.பழனிசாமி வீட்டிற்கு கருமத்தம்பட்டி டிஎஸ்பி பாலமுருகன் தலைமையிலான சென்ற போலீசார் பழனிச்சாமியை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். 

 இதற்கிடையே, சூலூர் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் தனக்கு ஜாமீன் வழங்க கோரிய கே.சி. பழனிசாமியின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.மீண்டும் ஜாமின் மனு போட்டப்பட்டது.இந்நிலையில், அ.தி.மு.க. முன்னாள் எம்.பி.யான கே.சி.பழனிசாமிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டு உள்ளது.  இதனால் அவர் கோவை மத்திய சிறையில் இருந்து வெளிவருகிறார்.
சிங்கம் வெளியில் வந்து ஓபிஎஸ்,எடப்பாடி பதவி தான் போலியானது; நான் போலி அல்ல என்பதை அதிமுகவிற்கு நிருபிப்பார் என்கிறார்கள் அவருடைய ஆதரவாளர்கள்.
 

click me!