Russia declares cease: பிரதமர் மோடி சொன்ன ஒற்றை வார்த்தை..? போரை நிறுத்தியது ரஷ்யா.

By Ezhilarasan BabuFirst Published Mar 5, 2022, 12:37 PM IST
Highlights

தற்காலிகப் போர்நிறுத்தத்தை உக்ரைன் தரப்பும் ஏற்றுக் கொண்டதாக ரஷ்யா கூறியுள்ளது. எனவே உடனடியாக போரை தற்காலிகமாக நிறுத்துவதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

உக்ரைன் மீதான போரை தற்காலிகமாக நிறுத்துவதாக ரஷ்யா அறிவித்துள்ளது. 10வது நாளாக போர் நடந்து வந்த நிலையில், உக்ரைனில் சிக்கியுள்ளவர்கள் வெளியேறுவதற்கு வசதியாக பேரை தற்காலிகமாக நிறுத்துவதாக ரஷ்யா அறிவித்திருக்கிறது. இது அங்கு சிக்கியுள்ளவர்கள் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. 

உக்ரைனுக்கும்-ரஷ்யாவுக்கும் இடையே கடந்த 10 நாட்களுக்கும் மேலாக போர்  நீடித்து வருகிறது. இதனால் இரு தரப்பிலும் ஏராளமான உயிரிழப்புகள் நடந்துள்ளது.  இதில் பொதுமக்கள் அதிக அளவில் கொல்லப்பட்டுள்ளனர். இந்த போரால் சர்வதேச அளவில் உணவுப் பொருட்கள் விலை உயர்வு, பெட்ரோல் டீசல் விலை உயர்வு மற்றும் பண மதிப்பு இழப்பு போன்றவை தலைதூக்க தொடங்கியுள்ளது. ரஷ்யா-உக்ரைன் ஆகிய இரு நாட்டிலும் கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் பசி பஞ்சம் ஏற்பட தொடங்கியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையேயான இந்த மோதலில்  உக்ரைனே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு திரும்பிய பக்கமெல்லாம் போர்க்களமாக காட்சியளிக்கிறது.

மக்கள் உயிருக்கு அஞ்சி பதுங்கு குழிகளில் தங்க வருகின்றனர். மெட்ரோ ரயில் நிலையங்களில் மக்கள் தஞ்சம் அடைந்து தங்கள் உயிரை பாதுகாத்து வருகின்றனர். திரும்பிய பக்கமெல்லாம் எல்லாம் குண்டுவெடிப்பு சத்தமும் துப்பாக்கிச்சூடு சப்தம் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. மரண ஓலம் , கரும்புகை மண்டலமாக உக்ரைன் காட்சியளிக்கிறது. இதற்கிடையில் அங்கு படிக்கச் சென்ற வெளிநாட்டு மாணவர்கள் போர்க்களத்தில் சிக்கி தப்பிக்க வழிதேடி உயிருக்கு போராடி வருகின்றனர். இந்தியா உள்ளிட்ட நாடுகள் தூதரகங்கள் வாயிலாக தங்கள் நாட்டு குடிமக்களை மீட்பதற்கான முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் இந்திய பிரதமர் மோடி- ரஷ்யா அதிபரை தொலைபேசி வாயிலாக இந்தியர்களை மீட்க ரஷ்யா உதவி செய்ய வேண்டுமென வலியுறுத்தி இருந்தார். 

இந்நிலையில் உக்ரைனில் சிக்கியுள்ள அப்பாவி மக்கள், மாணவர்கள் உக்ரைனில் இருந்து பத்திரமாக வெளியேற மனிதாபிமான அடிப்படையில் தற்காலிகமாக போரை நிறுத்தவதாக ரஷ்யா அறிவித்துள்ளது. போர் நடைபெறும் பகுதியில் சிக்கியுள்ள அப்பாவி மக்கள் பாதுகாப்பாக வெளியேற வேண்டும் என்றும் ரஷ்யா அறிவித்துள்ளது. இந்த தாக்குதலால் ஏராளமான மக்கள் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் அண்டை நாடுகளுக்கு அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர். அதேபோல் உக்ரைன் மீது தொடர்ந்து போர் நடைபெற்று வரும் நிலையில், அங்குள்ள பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்திய பிரதமர் மோடி மற்றும் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் ரஷ்ய அதிபரிடம் அங்குள்ள வெளிநாட்டு மாணவர்கள் வெளியேற ரஷ்யா ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்திய நிலையில் உக்ரைன்  மீதான போரை தற்காலிகமாக நிறுத்துவதற்கு ரஷ்யா அறிவித்திருக்கிறது.

தற்காலிகப் போர்நிறுத்தத்தை உக்ரைன் தரப்பும் ஏற்றுக் கொண்டதாக ரஷ்யா கூறியுள்ளது. எனவே உடனடியாக போரை தற்காலிகமாக நிறுத்துவதாக ரஷ்யா அறிவித்துள்ளது.  இந்திய நேரப்படி  காலை 11:30 மணிக்கு போரை ரஷ்யா நிறுத்தியது. போர் நிறுத்தப்பட்டுள்ளதால் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அப்பாவி மக்கள் வெளியில் இருந்து சிறப்பு விமானங்கள் மூலம் வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்லப்படும் பணி துரிதப்படுத்தப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் உக்ரைனில்  சாலைகள் சீர் செய்யப்பட்டு பொது மக்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது குறிப்பிடதக்கது. 
 

click me!