முதல்வரின் எடப்பாடி தொகுதியில் உதயநிதியை எச்சரித்த மூதாட்டி... அதிர்ச்சியில் அதிமுகவினர்..!

By Thiraviaraj RMFirst Published Mar 30, 2021, 4:25 PM IST
Highlights

பழனிசாமியையும், மோடியையும் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் புறக்கனித்தீர்கள். முதலமைச்சரின் சொந்த கிராமமான நெடுங்குளம் ஊராட்சியிலேயே திமுக 200 வாக்குகள் கூடுதலாக கொடுத்தீர்கள். திமுகவின் வெற்றியை இந்தியாவே திரும்பி பார்த்தது. 

எடப்பாடி தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினிடம், உதயசூரியனுக்கு ஓட்டு நாங்க போட்டுவிடுவோம், ஆனா வாக்குப் பெட்டியை மாற்றிவிடாமல் நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள் என ஒரு ஒரு மூதாட்டி எச்சரித்துப் பேசினார்.

சேலம் மாவட்டம், எடப்பாடியில் திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, எடப்பாடி தொகுதி திமுக வேட்பாளர் சம்பத் குமாருக்கு வாக்கு சேகரித்துப் பேசினார்.

அப்போது உதயநிதி பேசுகையில், “பழனிசாமியையும், மோடியையும் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் புறக்கனித்தீர்கள். முதலமைச்சரின் சொந்த கிராமமான நெடுங்குளம் ஊராட்சியிலேயே திமுக 200 வாக்குகள் கூடுதலாக கொடுத்தீர்கள். திமுகவின் வெற்றியை இந்தியாவே திரும்பி பார்த்தது. இப்போதும் நீங்கள் திமுகவிற்கு வாக்களிப்பீர்கள், அதுமட்டும் போதாது, நீங்கள் பிரச்சாரம் செய்து, சம்பத் குமாரை வெற்றிபெறச் செய்ய வேண்டும்.

பணமதிப்பிழப்பு அறிவிப்பின் போது, ஏடிஎம் வாசலில் பலர் இறந்ததை மறந்துவிடக் கூடாது. விரைவில் ஜெயிலுக்கு போகவிருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு வாக்களித்துவிடாதீர்கள். நீட் தேர்வு வேண்டாம் என பல மாணவர்கள் உயிரிழந்தார்கள். தூத்துகுடி போராட்த்தில் பங்கேற்ற 13 பேரை, காவல் துறை மூலம் சுட்டு கொன்றார்கள், இதை டி.வி. பார்த்து தெரிந்து கொண்டதாக முதலமைச்சர் சொன்னார். எடப்பாடியில் திமுக வேட்பாளர் சம்பத்குமார் வெற்றி பெற்ற செய்தியை, டீ.வி. பார்த்து பழனிசாமி தெரிந்துகொள்ள போகிறார்.

சாத்தான்குளத்தில் இரண்டு பேரை போலீஸ் லாக்கப் இல் அடித்து, உயிரிழந்தார்கள். உடல் நலம் பாதித்து இறந்ததாக விசாரணை க்கு முன்பே முதலமைச்சர் சொல்கிறார். கொரோனாவில் ஊழல், துடப்பம் வாங்கியதில் ஊழல். இந்திய குடியுரிமை சட்டத்தால் யாருக்கும் பாதிப்பில்லை என்று சொல்லிவிட்டு, இப்போது அதிமுக தேர்தல் அறிக்கையில், சி.ஏ.ஏ தேவையற்றது என்கிறார்கள்.

எய்ம்ஸ் மருத்துவமனை காணவில்லை என தேடிகொண்டிருக்கிறார்கள். பாஜகவைச் சார்ந்த ஒருவர் என் மீது வழக்கு தொடுத்திருக்கிறார். மோடியின் அடிமை எடப்பாடி பழனிசாமி. தனது சுயநலத்திற்காக, ஒட்டுமொத்த தமிழகத்தின் மானத்தை, உரிமைகளை அடமானம் வைத்துவிட்டார் பழனிசாமி.” என்று கூறினார்.

அப்போது, உதயசூரியனுக்கு ஓட்டு நாங்க போட்ருவோம், ஆனா பெட்டியை மாற்றிவிடாமல் நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள் என ஒரு மூதாட்டி உதயநிதியிடம் எச்சரிக்கை விடுத்துப் பேசினார்.

click me!