சேகர் பாபு தொல்லை தாங்க முடியல.. கதறும் பாஜக துறைமுகம் வேட்பாளர்..

Published : Mar 30, 2021, 03:40 PM ISTUpdated : Mar 30, 2021, 03:41 PM IST
சேகர் பாபு தொல்லை தாங்க முடியல.. கதறும் பாஜக துறைமுகம் வேட்பாளர்..

சுருக்கம்

வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல்நடைபெற உள்ளது. அதை எதிர்கொள்ள அரசியில் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. அதிமுக- திமுக ஆகிய இரு கட்சிகளும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன.  

தொடர்ந்து திமுக துறைமுகம் தொகுதி வேட்பாளர் சேகர்பாபு தனக்கு பல்வேறு வகையில் நெருக்கடி கொடுத்து வருவதாக அத்தொகுதியில் பாஜக வேட்பாளர் வினோஜ் செல்வம்  தெரிவித்துள்ளார். 

வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல்நடைபெற உள்ளது. அதை எதிர்கொள்ள அரசியில் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. அதிமுக- திமுக ஆகிய இரு கட்சிகளும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன. இதனால் தேர்தல் களம் சூடுபடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் குறிப்பாக வட சொன்னையின் துறைமுகம், ராயபுரம், திருவெற்றியூர். போன்ற தொகுதிகள் பதற்றம் நிறைந்த தொகுதிகளாக இருந்து வருகிறது. எனவே அங்கு வேட்பாளர்கள் மற்றும் கட்சிகளுக்கு இடையே பிரச்சாரத்தின் போது மோதல் ஏற்படுவது வழக்கம். அந்த வகையில் அத்தொகுதியில் திமுக வேட்பாளர் சேகர்பாபு செல்வாக்கு மிகுந்தவராக இருந்து வருகிறார். 

இந்நிலையில் அவரை எதிர்ந்து அதிமுக-பாஜக கூட்டணி சார்பில் களமிறங்கியுள்ள வினோஜ் செல்வம் சேகர்பாபு தனக்கு பல்வேறு வகையில் நெருக்கடி கொடுத்து வருவதாக கூறியுள்ளார். இது குறித்து இன்று செய்தியாளர்களிடம் கூறிய அவர், நேற்றைய முன்தினம் துறைமுகம் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் பிரச்சாரம் முடித்து விட்டு நான்  எனது நண்பர் வீட்டில் உணவருந்திக் கொண்டிருந்தபோது  அங்கு திடீரென வந்த திமுகவை சேர்ந்த கும்பல் வீட்டுக்குள் நுழைந்து வீட்டில் இருந்த பொருட்கள் எல்லாம் அடித்து உடைத்து நாசம் செய்து விட்டனர். மேலும் என்னை தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டல் விடுத்தனர். இது தொடர்பாக உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அங்கிருந்த ஆதாரங்களை எடுத்துக் கொண்டு வீட்டின் உரிமையாளர் கொடுத்த புகாரின் பேரில் நேற்று அதில் தொடர்புடைய இரண்டு பேரை கைது செய்துள்ளனர். 

இதே போன்று ஏற்கனவே வேட்புமனு பரிசீலனையின் போது வினோஜ் செல்வம் என்ற போலியான பெயரை வைத்து வேட்புமனு நிறுத்தி வைக்க முயன்றனர். இப்படி தொடர்ச்சியாக திமுக வேட்பாளர் சேகர்பாபு தன்னிடம் பிரச்சினையில் ஈடுபட்டு வருகிறார்கள்.நேற்றுமுன்தினம் நடைபெற்ற கலவரத்தில் இதுவரை வெறும் 2 பேரை மட்டுமே கைது செய்துள்ளனர். மீதம் உள்ள நபர்களை நிச்சயம் போலீசார் கைது செய்து விரைவில் நடவடிக்கை எடுப்பார்கள் என அந்த பகுதி மக்களும் நானும் நம்புகிறோம் என வினோஜ் தெரிவித்தார். 

 

PREV
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!