தமிழக மக்கள் மீது பேரன்பு கொண்டவர் பிரதமர் மோடி.. 234 தொகுதிகளிலும் எங்களுக்கு தான் வெற்றி.. முதல்வர் அதிரடி.!

Published : Mar 30, 2021, 03:23 PM IST
தமிழக மக்கள் மீது பேரன்பு கொண்டவர் பிரதமர் மோடி.. 234 தொகுதிகளிலும் எங்களுக்கு தான் வெற்றி.. முதல்வர் அதிரடி.!

சுருக்கம்

அதிமுக பாஜக கூட்டணி வெற்றிக் கூட்டணி. கேட்கும்போது எல்லாம் தமிழகத்துக்கு தேவையான திட்டங்களை கொடுக்கிறது மத்திய பாஜக அரசு என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

அதிமுக பாஜக கூட்டணி வெற்றிக் கூட்டணி. கேட்கும்போது எல்லாம் தமிழகத்துக்கு தேவையான திட்டங்களை கொடுக்கிறது மத்திய பாஜக அரசு என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பாஜக மற்றும் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக பிரதமர் மோடி தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். இப்பொதுக்கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி பேசுகையில்;- பிரதமர் மோடி, இந்தியா உயர்வடைய நாட்டு மக்கள் அனைவருக்கும் அனைத்து அடிப்படை வசதிகளையும் நிறைவேற்ற வேண்டும் என உழைத்துக்கொண்டிருக்கிறார். தமிழகத்திற்கு தேவையான திட்டங்களை கேட்கும்போதெல்லாம் மத்திய அரசு கொடுத்து வருகிறது. மத்தியிலும், மாநிலத்திலும் இணக்கமான உறவு இருந்தால் தான் திட்டங்களுக்கு நிதி கிடைத்து, நிறைவேற்ற முடியும்.

உலக அளவில் இந்திய நாடு பெருமை அடைவதற்கு பிரதமர் மோடியின் அயராத உழைப்பே காரணம். தமிழகத்தில் உள்கட்டமைப்பு சிறப்பாக இருப்பதால் தான் முதலீட்டாளர்கள் தமிழகத்தை நோக்கி வருகின்றனர். தொழிற்சாலைகள் தமிழகத்திற்கு வரும்போது நேரடியாக, மறைமுகமாக 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். தமிழகத்தில் உயர்கல்வி படிப்போரின் எண்ணிக்கை 49 சதவீதமாக அதிகரித்துள்ளது. சட்டசபை தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும்.

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் கொரோனா வைரசுக்கான சோதனைகளை அதிகளவு செய்ததால் கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. அனைத்து தொகுதிகளிலும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை பெருவாரியான ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்து மீண்டும் ஆட்சி மலர செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

முதல்வருக்கு எதிராக கோஷம் எழுப்பிய MLA மகன்..? வீடியோ வெளியிட்டு அண்ணாமலை விமர்சனம்
எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!