அதிமுக ஆட்சியில் பெண் ஐ. பி.எஸ் அதிகாரிக்கே பாதுகாப்பு இல்லை... திருப்பி அடித்த கனிமொழி..

By Ezhilarasan BabuFirst Published Mar 30, 2021, 3:11 PM IST
Highlights

ஐ. பி.எஸ் அதிகாரிக்கே பாதுகாப்பு இல்லை. புகார் கொடுப்பதற்கு அரசு தடுத்துள்ளது. பொள்ளாச்சி சம்பத்தை யாரும் மறக்க முடியாது. பழனிசாமியின் ஆட்சியில் அராஜகத்தின் உச்சம் நடைபெற்று வருகிறது. 

தமிழகம் முழுவதும் முதல்வர் பழனிச்சாமி அடிக்கல் மட்டுமே நாட்டி, அடிக்கல் நாயகன் பழனிச்சாமி என பெயர் எடுத்துள்ளதாக திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார். மைலாப்பூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் த. வேலுவிற்கு ஆதரவு தெரிவித்து திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி மயிலாப்பூர் பல்லாக்கு மானியம் பகுதியில் வாக்கு சேகரித்தார். அப்போது மக்கள் மத்தியில் பேசிய கனிமொழி,

உங்களுடைய வரவேற்பை பார்க்கும் போது வெற்றி உறுதியாகி இருப்பது தெரிகிறது. நமது திமுக வேட்பாளர் அடித்தட்டு மக்களின் பிரச்சனைக்காக குரல் கொடுக்கும் வேட்பாளர். ஆனால், அதிமுக நிறுத்தியுள்ள வேட்பாளரை மக்கள் எளிதில் அணுக முடியாது. ஆனால் தொலைபேசியில் அழைத்தால் நமது வேட்பாளர் உடனே வந்து விடுவார். முக ஸ்டாலின் முதலமைச்சராக வரபோகிறார். ஆளுங்கட்சி எம்.எல்.ஏவாக இவர் சிறப்பாக செயல்பட போகிறார். மத்திய அரசு தான் இங்கு ஆட்சி செய்து வருகிறது. இங்கு அடிமை ஆட்சி நடைபெற்று வருகிறது. அரசின் மீது மக்கள் வெறுப்புடன் இருப்பது எனது சுற்றுபயணத்தில் தெரியவந்தது. 

ஆட்சிக்கு வர மாட்டோம் என்கிற நம்பிக்கையில் இஷ்ட்டத்திற்கு தேர்தல் அறிக்கையை தயாரித்துள்ளனர். தமிழகம் முழுவதும் பத்து வருட ஆட்சியில் சாலை வசதி செய்யப்படவில்லை. எட்டு வழி சாலைக்கு அடிக்கல் நாட்டுவதில் ஆர்வம் காட்டும் முதல்வர் மற்ற சாலைகள் போடுவதற்கு காட்டவில்லை. அடிக்கல் நாயகன் பழனிச்சாமி, தமிழகம் முழுவதும் அடிக்கல் மட்டுமே நாட்டி வருகிறார். ஒரு செங்கல் மட்டுமே எடுத்து வைத்துள்ளனர். திமுக ஆட்சியில் பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்படும், பால் விலை கட்டுக்குள் கொண்டுவரப்படும், மேலும் இங்குள்ள குடிசை வாழ் மக்களுக்கு பட்டாவுடன் வீட்டு மனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். 

தொலைபேசி தரப்படுமா என கனிமொழியிடம் கூட்டத்தில் இருந்த  பெண்கள் கேட்டார், அதற்கு கனிமொழி, அது எங்கள் தேர்தல் அறிக்கையில் இல்லை. அது அவர்களின் அறிக்கை. நமது தேர்தல் அறிக்கையில் அவ்வாறு குறிப்பிடப்படவில்லை என கூறினார். ஐ. பி.எஸ் அதிகாரிக்கே பாதுகாப்பு இல்லை. புகார் கொடுப்பதற்கு அரசு தடுத்துள்ளது. பொள்ளாச்சி சம்பத்தை யாரும் மறுக்க முடியாது. பழனிசாமியின் ஆட்சியில் அராஜகத்தின் உச்சம் நடைபெற்று வருகிறது. கேள்வி கேட்டால் சுட்டு தள்ளுகிறார்கள். இதுவரை ஸ்கூட்டர் கொடுத்தார்களா? அதே போல தான் 6 சிலிண்டரும் கொடுக்க போகிறார்கள். நுழைவுத்தேர்வு, வேலையின்மை, இளம் தலைமுறையினரின் பெரிய பிரச்சனையாக உள்ளது. ஸ்டாலின் ஆட்சியில் அனைத்தும் சீர்படுத்தப்படும். இவ்வாறு கூறினார்.  

click me!