தமிழகத்தில் அடுத்த முறை இந்த கட்சிக்கு தான் வெற்றி - அடித்து கூறும் மம்தா...! 

Asianet News Tamil  
Published : Mar 28, 2018, 12:10 PM ISTUpdated : Sep 19, 2018, 02:10 AM IST
 தமிழகத்தில் அடுத்த முறை இந்த கட்சிக்கு தான் வெற்றி - அடித்து கூறும் மம்தா...! 

சுருக்கம்

The next time in Tamilnadu this party is the winner-beat Mamta

தென்னிந்தியாவை பொறுத்த வரை தமிழகத்தில் வரும் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று பெரும் சக்தியாக உருவெடுக்கும் என மேற்குவங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். 

மத்திய பாஜக அரசிற்கு எதிராக தேசிய ஓங்கி ஒலிக்கும் குரல்களில் பிரதானமானது மம்தா பானர்ஜி குரல். பிரதமர் மோடி தலைமையிலான அரசுக்கு எதிராகவும், பாஜக-காங்கிரஸுக்கு மாற்றாக மூன்றாவது தேசிய அணியை உருவாக்குவதிலும் மும்முரமாக செயல்பட்டு வருகிறார் மம்தா பானர்ஜி. 

பாஜக-காங்கிரஸுக்கு மாற்றாக மூன்றாவது தேசிய சக்தியை உருவாக்க முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இப்படியான சூழலில், ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க மறுப்பதால், மத்திய பாஜக அரசில் அங்கம் வகித்த தெலுங்கு தேசம் கட்சி, பாஜகவுடனான கூட்டணியிலிருந்து விலகியுள்ளது. மோடி தலைமையிலான அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர முடிவு செய்துள்ளது.

இதனிடையே மம்தா திமுக செயல்தலைவர் ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அப்போது, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் முன்வைத்த மாற்று அணி கோரிக்கையை ஆதரிக்க வேண்டும். பாஜக, காங்கிரஸ் அல்லாத மாற்று அணிக்கு ஆதரவளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார். 

இந்நிலையில், தென்னிந்தியாவை பொறுத்த வரை தமிழகத்தில் வரும் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று பெரும் சக்தியாக உருவெடுக்கும் என மேற்குவங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். 
 

PREV
click me!

Recommended Stories

பாஜகவின் புதிய தலைவராகிறார் நிதின் நபின்.. வேட்புமனு தாக்கல்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது?
இறுக்கும் சிபிஐ... விஜய் எடுக்கும் இறுதி முடிவு..! தத்தளிக்கும் தவெக