
நீங்க எப்போ அவங்களோட கை கோர்த்திங்களோ அப்போவே ஜனநாயகம் கொலை செய்யப் பட்டுவிட்டது. நீங்கள் எங்களை சொல்கிறீர்களா? என ராகுலுக்கு பதிலடி கொடுத்துள்ளார் அமித்ஷா.
இன்று காலை அவசர அவசரமாக பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித் ஷா ஆகியோர் கூட வராமல், அமைச்சர்கால் யாரும் இல்லாமல் பெங்களூருவில் உள்ள விதான் சௌதாவில் எடியூரப்பா கர்நாடக முதல்வராக பதவியேற்றுக் கொண்டார்.
தனிப் பெரும் கட்சியாக இருந்தாலும் பெரும்பான்மை இல்லாத நிலையில் பாஜகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்க, பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புக் குரல் எழுந்தது. மேலும் இதற்க்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது.
நள்ளிரவில் தொடங்கி விடிய விடிய நடந்த இந்த வழக்கில் எடியூரப்பா முதல்வராக பதவி ஏற்க தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இந்நிலையில்தான் இன்று காலை முதல்வராக பதவியேற்றுக் கொண்டார் எடியூரப்பா.இதுபற்றி காங்கிரஸ் கட்சித் தலைவரும் பாஜக தலைவர் அமித் ஷாவும் ட்விட்டரில் மோதிக் கொண்டனர்.
இதுபற்றி ட்விட்டரில் கருத்து வெளியிட்ட ராகுல், ‘’கர்நாடகாவில் பெரும்பான்மை இல்லாத நிலையிலும் ஆட்சி அமைக்கிற பாஜகவின் செயல்பாடு என்பது முரட்டுத் தனமான நடவடிக்கை. இது அரசியல் சாசனத்தைப் பரிகாசம் செய்யும் செயல்’’ என்று கடுமையாகச் திட்டினார்.
அதுமட்டுமல்ல, ‘’இன்று பாஜக தனது வெற்று வெற்றியைக் கொண்டாடுகிறது. இந்தியாவோ தன் ஜனநாயகம் தோல்வி அடைந்ததற்காக துக்கம் அனுசரிக்கிறது’’ என காட்டமாக பதிவிட்டார்.
ராகுலின் இந்த டிவீட்டுக்கு இந்தத் தாக்குதலுக்கு ட்விட்டரிலேயே பதில் கொடுத்த பாஜக தலைவர் அமித் ஷா. “கர்நாடக தேர்தல் முடிவுகளுக்குப் பின் எந்த நிமிடத்தில் காங்கிரஸும் மதச்சார்பற்ற ஜனதா தளமும் சந்தர்ப்ப வாதத்துக்காக கை கோர்த்தனவோ, அந்த நிமிடத்தில்தான் ஜனநாயகம் கொல்லப்பட்டது.
அடுத்ததாக, பாஜக வென்றது 104 தொகுதிகள், காங்கிரஸ் வென்றது 78 தொகுதிகள், உங்கள் முதல்வர் ஒரு தொகுதியில் படு கேவலமாக தோற்றுவிட்டார். அமைச்சர்கள் பல தொகுதிகளில் ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் மண்ணைக் கவ்வினர். நீங்கள் கூட்டு சேர்ந்துள்ள மஜத வெறும் 37 தொகுதிகள் தான் வென்றது. அதிலும் கணக்கே இல்லாமல் டெபாசிட்டை இழந்தனர். இப்படி இருக்கையில், யார் மெஜாரிட்டி என மக்கள் உணருவார்கள் என பதிவிட்டுள்ளார்.
மேலும் காங்கிரசின் இன்றைய தலைவர் தனது கட்சியின் பெருமை மிகு வரலாறுகளை அறியாதவர் போலும். எமர்ஜென்சியைக் கொண்டுவந்தது, பல மாநில ஆட்சிகளை 356 சட்டப் பிரிவு மூலம் கலைத்தது, நீதிமன்றங்களையும் ஊடகங்களையும் சீரழித்தது, பொது சமூகத்தைக் கெடுத்தது என்ற வரலாறு கொண்டது காங்கிரஸ்’’ பங்கமாக பதிலடி கொடுத்தார் பாஜக லீடர் அமித் ஷா.