கட்டுக்கட்டாக சிக்கிய பலகோடி ரூபாய்... வசமாக சிக்கிய துரைமுருகன்..!

Published : Apr 01, 2019, 11:12 AM IST
கட்டுக்கட்டாக சிக்கிய பலகோடி ரூபாய்... வசமாக சிக்கிய துரைமுருகன்..!

சுருக்கம்

வேலூர் அருகே துரைமுருகனுக்கு நெருக்கமான பூஞ்சோலை சீனிவாசன் என்பவருக்கு சொந்தமானது சிமெண்ட் குடோனில் மூட்டை மூட்டையாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வேலூர் அருகே துரைமுருகனுக்கு நெருக்கமான பூஞ்சோலை சீனிவாசன் என்பவருக்கு சொந்தமானது சிமெண்ட் குடோனில் மூட்டை மூட்டையாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த மார்சு 30ம் தேதி திமுக பொருளாளா் துரைமுருகன் வீடு மற்றும் கல்லூரிகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையிடுவது சில மணி நேரம் தடுத்து நிறுத்தப்பட்டு துரைமுருகன் ஆதரவாளர்கள் வாக்குவாதம் நடத்தியிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் வருமான வரித்துறையினர் வேலூா் மாவட்டத்தின் பள்ளிகுப்பம் பகுதியில் உள்ள தனியாருக்குச் சொந்தமான சிமெண்ட் குடோனில் இன்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, அங்கு, கட்டுக்கட்டாக மூட்டைகளில், அட்டைபெட்டிகளில் 2000 ரூபாய் நோட்டுகள் கட்டி வைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

ஒவ்வொரு மூட்டையிலும், வேலூர் தொகுதிக்கு உட்பட்ட வார்டுவாரியாக வாக்காளர்களுக்கு வழங்க வேண்டிய பணம் தொடர்பாக அதில் குறிப்பு எழுதி வைக்கப்பட்டிருந்தது. இந்த பணம் ரூ.10 கோடி இருக்கும் எனக் கருதப்படுகிறது. 5 இயந்திரங்களை வைத்து பணத்தை என்னூம் பணிகள் காலை 8 மணி முதல் தொடர்ந்து நடந்து வருகிறது. 

இந்நிலையில் இந்தப்பணம் கண்டெடுக்கப்பட்ட சிமெண்ட் குடோன் திமுக பொருளாளர் துரைமுருகனுக்கு நெருக்கமான பூஞ்சோலை சீனிவாசன் என்பவருக்கு சொந்தமானது என வருமான வரித்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் துரைமுருகனுக்கு சொந்தமான கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரியில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அத்தோடு வஞ்சூர் திமுக ஊராட்சி செயலாளர் பெருமாள் என்பவருக்கு சொந்தமான இடங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறனர்.  

இது குறித்து தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் கூறுகையில், வேலூரில்ன் அரசியல் பிரமுகர் வீடு மற்றும் கல்லூரிகளில் சோதனை நடத்தியிருந்தோம். எங்கள் சோதனையை தெரிந்து கொண்டதும் அன்றைய தினம் நள்ளிரவில் இந்த பணத்தை அவர் தனது கல்லூரியில் இருந்து சிமெண்ட் குடோனுக்கு மாற்றிவிட்டார். இப்போது அதையும் தெரிந்து பறிமுதல் செய்துள்ளோம் எனத் தெரிவித்துள்ளனர். 

இதனிடையே இந்த பணம் அந்த பிரபலத்திற்கு சொந்தமானது என ஆதாரப்பூர்வமாக தெரியவந்தால், வருமான வரித்துறையினரிடம் அவர் சிக்க வேண்டியிருக்கும் என்பதால் அரசியல் ரீதியாகவும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

நம்ம சமூகத்தவர் முதல்வரா ஜெயிக்கணும்னா இதுதான் சான்ஸ்... டெல்லியில் எஸ்.பி.வேலுமணியின் சீக்ரெட் மூவ்..!
விஜய் கண் எதிரே திமுக அரசை பாராட்டிய ஆற்காடு நவாப்! அப்படியே ஷாக்கான தளபதி! என்ன நடந்தது?