மீண்டும் அந்தரங்க வீடியோவை வெளியிடுவேன்... மிரட்டும் வெற்றிவேல்..!

Published : Apr 01, 2019, 10:23 AM IST
மீண்டும் அந்தரங்க வீடியோவை வெளியிடுவேன்... மிரட்டும் வெற்றிவேல்..!

சுருக்கம்

ஆளுங்கட்சிக்கு அதிர்ச்சி தரும் வகையில் தேர்தல் நேரத்தில் புதிய வீடியோவை வெளியிடுவேன் என முன்னாள் எம்.எல்.ஏ. வெற்றிவேல் கூறியுள்ளது அதிமுகவினர் இடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

ஆளுங்கட்சிக்கு அதிர்ச்சி தரும் வகையில் தேர்தல் நேரத்தில் புதிய வீடியோவை வெளியிடுவேன் என முன்னாள் எம்.எல்.ஏ. வெற்றிவேல் கூறியுள்ளது அதிமுகவினர் இடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. 

பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் வெற்றிவேல் நேற்று மாலை பெரம்பூர் தொகுதிக்கு உட்பட்ட கொடுங்கையூர், எம்ஆர் நகர் மார்க்கெட் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில்  ஈடுபட்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் மக்களை சந்திப்பதே எங்கள் வியூகம். மக்கள், ஆளுங்கட்சியை நல்லவர்களாக பார்க்கவில்லை. தற்போது, ஸ்டாலினுக்கும், தினகரனுக்கும் இடையேதான் போட்டி உள்ளது. நல்ல ஆளுமையை தான், மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். மக்கள் எதிர்பார்ப்பில், ஸ்டாலின் தோற்றுவிட்டார். அவருக்கு, சுதந்திர நாள் தேதி கூட தெரியவில்லை. படித்தவர்கள், மக்களுக்காக போராடுபவர்கள், தினகரனை, அடையாளம் கண்டு விட்டனர்.

 

மேலும் மதுசூதனன் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி பேசி உள்ளார். குறிப்பாக எனக்கு இரண்டு மனைவிகள் இருப்பதாக பேசி இருக்கிறார். இரண்டு மனைவி இருந்தால் என்ன தப்பு. 40 வருட பிரச்னையை இப்போது பேச வேண்டிய அவசியம் இல்லை என்றார். 

முன்னதாக ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான வீடியோவை வெளியிட்டது போல், ஆளுங்கட்சிக்கு அதிர்ச்சி தரும் வகையில் மதுசூதனனின் அந்தரங்கம் முழுவதும் என்னிடம் வீடியோவாக உள்ளது. அதை மதுசூதனன் சம்மதித்தால் வீடியோவை வெளியிட தயார். மதுசூதனன் வயதில் பெரியவர் என்பதால் அமைதியாக உள்ளேன் என பெரம்பூர் தொகுதி அ.ம.மு.க., வேட்பாளருமான, வெற்றிவேல் கூறியுள்ளார். இதனால் ஆளும் அதிமுகவினர் அச்சமடைந்துள்ளனர். 

PREV
click me!

Recommended Stories

Magalir Urimai Thogai: அக்டோபரில் ரூ.2,500 வரப்போகுதா? முதல்வர் விஜய் கொடுக்கப்போகும் அடுத்த ஜாக்பாட்!
Thaimaman Thanga Modhiram Scheme: தாய்மாமன் தங்க மோதிரம் - யார் தகுதி? என்னென்ன ஆவணங்கள் தேவை?