மிகக் கொடூரமான புதிய வைரஸ்... டெல்டா ப்ளஸ்... மீண்டும் உருமாறி மிரட்டல்... நடுங்கும் மருத்துவத்துறை..!

By Thiraviaraj RMFirst Published Jun 14, 2021, 11:31 AM IST
Highlights

 இந்த வகை கலப்பு கொரோனா வைரஸ் நோய்  எதிர்ப்பு சக்திகளை முறியடிப்பதாக கூறப்படுகிறது. 

இந்தியாவில் 2ம் அலையில் அதிக தாக்கத்தை ஏற்படுத்திய உருமாறிய டெல்டா வைரஸ் மீண்டும் உருமாறியுள்ளது. டெல்டா ப்ளஸ் என்று பெயரிடப்பட்டுள்ள வைரஸால் இந்தியாவில் இதுவரை 6 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த நோய் மிகவும் ஆபத்தானது என்றும் எதிர்ப்பு சிகிச்சையை முறியடிக்கக்கூடியது என்றும் மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

 

இதுகுறித்து இங்கிலாத்தின் பொது சுகாதாரத்துறை நடத்திய ஆய்வில் இந்த டெல்டா பிளஸ் நோயின்  தீவிரம் குறித்து விளக்கப்பட்டுள்ளது. இது குறித்து டெல்லியில் கருத்து தெரிவித்த மருத்துவ நிபுணர்கள் இந்த வகை கலப்பு கொரோனா வைரஸ் நோய்  எதிர்ப்பு சக்திகளை முறியடிப்பதாக கூறப்படுகிறது. Casirivimab, Imdevimab ஆகிய இரண்டு மருந்துகளுக்கு கட்டுப்படுவதாக கூறுகின்றனர். இந்த இரண்டு மருந்துகளின் கலப்பு மருந்தை அவசர காலப்பயன்பாட்டுக்கு பயன்படுத்த மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பின் அனுமதி கிடைத்திருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர். 

click me!