செக் கொடுத்தாங்க... பணம் மட்டும் வந்து சேரல! திமுகவை காய்ச்சி எடுக்கும் அமைச்சர்!

Asianet News Tamil  
Published : Feb 11, 2018, 03:43 PM ISTUpdated : Sep 19, 2018, 01:56 AM IST
செக் கொடுத்தாங்க... பணம் மட்டும் வந்து சேரல! திமுகவை காய்ச்சி எடுக்கும் அமைச்சர்!

சுருக்கம்

The money given to check is not come! - Minister Mafa Pandiyan

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைய, திமுகவின் நிதி இன்னும் வந்து சேரவில்லை என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறியுள்ளார்.

அமெரிக்காவிலுள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைய உலகில் உள்ள அனைத்து தமிழ் நெஞ்சங்களும் நிதியுதவி வழங்கி வருகின்றனர். தமிழக அரசு சார்பில் பத்து கோடி வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தமிழ் திரைப்பட நடிகர்கள் சிலர் நிதி கொடுத்தனர். நடிகர்கள் கமலஹாசன், விஷால் உள்ளிட்டோர் நிதியுதவி அளித்தனர்.

வேலம்மாள் கல்வி அறக்கட்டளையின் தலைவர் எம்.வி. முத்துராமலிங்கம் தமிழ் இருக்கை நன்கொடையாக 25 லட்சம் வழங்கியுள்ளார். இதேபோன்று ஏராளமானோர் நிதியுதவியை வழங்கி வருகின்றனர்

இந்த நிலையில் தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், கடந்த 7 ஆம் தேதி தமிழ் இருக்கை அமைய தி.மு.க. சார்பில் ரூ.1 கோடி நிதியுதவி அளிக்கப்படும் என கூறியுள்ளார்.

இந்த  நிதியுதவி தமிழ் மொழியின் மேம்பாட்டுக்காகவும், முதன்மைக்காகவும் போராடி வரும் திமுக தலைவர் கருணாநிதி சார்பில் வழங்கப்படும் என்றும்,  தமிழுக்கு கிடைக்க போகும் ஹார்வர்டு இருக்கை என்பது ஒவ்வொரு தமிழருக்கும் கிடைக்கும் பெருமிதம் ஆகும் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைய, திமுக ஒரு கோடி ரூபாய் நிதி அளிப்பது குறித்து அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் வரவேற்றிருந்தார். இந்த நிலையில், திமுகவின் நிதி இன்னும் வந்து சேரவில்லை என்று அவர் கூறியுள்ளார். விரைவில் வந்து சேரும் என்று நினைக்கிறேன் என்று கூறியுள்ளார். நிதிக்கான காசோலையை, திமுக அளித்துள்ள நிலையில் அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் இவ்வாறு கூறியுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

விஜய்யை திணறடித்த சிபிஐ.. தளபதியை தண்ணி குடிக்க வைத்த 'அந்த' 10 கேள்விகள்.. அடுத்த விசாரணை எப்போது?
அன்பில் மகேஷ் குக்கர்..! கே.என்.நேரு சாமான் செட்..! திமுகவின் தேர்தல் ஆட்டம் ஆரம்பம்..!