
தமிழர் பண்பாட்டை அமெரிக்காவில் பறைசாற்றயுள்ளார் கமல்.
அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் ஹார்வர்டு பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்பட்ட கருத்தரங்கில் கமல்ஹாசன் கலந்துகொண்டு பேசினார். இந்த நிகழ்வில், தமிழர் பண்பாட்டு உடையான வேட்டி, சட்டை அணிந்து கமல் கலந்துகொண்டார்.
அப்போது பேசிய அவர், கடந்த 37 ஆண்டுகளாக நற்பணி மன்றங்கள் மூலம் அரசியல் சேவையில் ஈடுபட்டு வந்ததாகவும் தற்போது நேரடி அரசியலில் ஈடுபட வேண்டிய நேரம் வந்துவிட்டதாகவும் தெரிவித்தார்.
பணத்துக்காக மக்களிடம் கையேந்தவில்லை; நல்ல கருத்துகளுக்காகவே மக்களிடம் கையேந்துவதாகவும் தெரிவித்த கமல், ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு கிராமத்தை தத்தெடுத்து அதை முன்மாதிரி கிராமமாக மாற்ற போவதாக தெரிவித்தார்.
ரஜினியுடன் கூட்டணி தொடர்பாக பேசிய கமல், ரஜினியும் நானும் நீண்டகால நண்பர்கள். அரசியலில் இருவரும் பொதுநோக்கமும் ஒன்றுதான். ஆனால் பாதை வெவ்வேறு. எனவே ரஜினியுடன் அரசியலில் இணைந்து செயல்பட வாய்ப்பில்லை என வெளிப்படையாக தெரிவித்துவிட்டார்.
அமெரிக்காவின் ஹார்வார்டு பல்கலைக்கழக விழாவில் வேட்டி, சட்டையுடன் கமல் கலந்துகொண்டது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.