பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த கும்பல். டெபுடி தாசில்தார் வீட்டில் 65 பவுன் நகை 25 கிலோ வெள்ளி கொள்ளை.

By Ezhilarasan BabuFirst Published Jan 19, 2021, 11:47 AM IST
Highlights

அதே நாளில் மதுரை கூடல் நகரில் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். அதில் ஒருவர் தப்பி ஓட்டம் பிடித்துள்ளார். மதுரை கூடல் நகர் அசோக் நகர் மூன்றாவது தெருவில் சந்தேகப்படும் படியாக கும்பல் ஒன்று பதுங்கியிருப்பதாக கூடல்புதூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அழகுமுத்துவிற்கு தகவல் கிடைத்தது. 

மதுரையில் டெபுடி தாசில்தார் வீட்டில் நழைந்து 65 பவுன் தங்க நகை 25 கிலோ வெள்ளி, நாட்டு துப்பாக்கி, 20000 ரொக்கப் பணம் கொள்ளையடுக்கப்பட்டுள்ளது. இதடையடுத்து கொள்ளையர்களை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர். மதுரை வானமாமலை நகர் ஷாலினி தெரு பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருபவர் முன்னாள் டெப்ட்டிதாசில்தார் ரவீந்திரன். இவர் குடும்பத்துடன் கடந்த 15ஆம் தேதி உறவினர் வீட்டுக்கு ராஜபாளையம் சென்று நேற்று அதிகாலை வீடு திரும்பினார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். 

உள்ளே சென்று பார்த்தபோது வீட்டிலிருந்த 65 பவுன் தங்க நகை 25 கிலோ வெள்ளி பொருட்கள் 20 ஆயிரம் ரொக்கப் பணம் மற்றும் நாட்டு துப்பாக்கியை மர்ம நபர்கள் கொள்ளையடித்தது தெரியவந்தது. உடனடியாக சம்பந்தப்பட்ட எஸ் எஸ் காலனி காவல் நிலையத்திற்கு புகார் தெரிவித்தார். புகாரை அடுத்து சம்பவ இடத்திற்கு காவல் துணை ஆணையர், பழனி குமார், காவல் ஆய்வாளர் சக்கரவர்த்தி,  கைரேகை நிபுணர்கள், மோப்ப நாயுடன்விரைந்து வந்து விசாரணை தடயங்களை சேகரித்தனர். மேலும் அப்பகுதி முழுவதும் உள்ள சிசிடிவி கேமராக்களை காவல் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

                                                                            .                                          

அதே நாளில் மதுரை கூடல் நகரில் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். அதில் ஒருவர் தப்பி ஓட்டம் பிடித்துள்ளார். மதுரை கூடல் நகர் அசோக் நகர் மூன்றாவது தெருவில் சந்தேகப்படும் படியாக கும்பல் ஒன்று பதுங்கியிருப்பதாக கூடல்புதூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அழகுமுத்துவிற்கு தகவல் கிடைத்தது. அவர் போலீசாருடன் சம்பவ இடத்திற்கு சென்று சுற்றி வளைத்து அங்கிருந்த ஆனையூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்த மோகன் குமார் மகன் சூரியபிரகாஷ் (20)அதே பகுதியைச் சேர்ந்த ராஜபாண்டியின் மகன் அருண் பாண்டி என்ற கௌதம் (21) ,விளாங்குடி கரிசல் குளத்தை சேர்ந்த காசிராஜன் மகன் பாரதி (20) அதே பகுதியைச் சேர்ந்த அய்யங்காளை மகன் தர்மராஜ் (25) ஆகிய 4 பேரையும் ஆயுதங்களுடன் கைது செய்தனர். மற்றொருவரான கரிசல் குளத்தைச் சேர்ந்த வேட்டையன் என்ற ஐயங்காளை அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார் அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த கும்பல் யாரையோ தீர்த்துக் கட்ட பதுங்கியிருந்தது  என போலீசார் சந்தேகிக்கின்றனர். 
 

click me!