எம்.எல்.ஏக்களுக்கு இந்த மாதம் பழைய சம்பளமே வழங்கப்படும் எனவும் புதிய ஊதிய உயர்வுக்கான ஒப்புதல் ஆளுநர் கையொப்பத்திற்காக காத்திருப்பதால் அடுத்த மாதம் புதிய ஊதியம் வழங்கப்படும் எனவும் சட்டப்பேரவை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். சட்டமன்ற உறுப்பினர்களின் மாத ஊதியம் 55 ஆயிரம் ரூபாயில் இருந்து அதிகரிக்க வேண்டும் என அதிமுக எம்.எல்.ஏக்கள் கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சட்டப்பேரவையில் எம்.எல்.ஏக்களின் சம்பளத்தை 1 லட்சத்து 5 ஆயிரம் ரூபாயாக அதிகரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். மசோதா நிறைவேற்றப்பட்டால் அரியர்ஸ் தொகையுடன் சேர்த்து சட்டமன்ற உறுப்பினர்கள் தலா 3லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுவார்கள் எனவும் முன்னாள் எம்எல்ஏக்கள் 20ஆயிரம் ரூபாய் வரை ஓய்வூதியம் பெறுவர் எனவும் தமிழ சட்ட சபையில் அறிவிக்கப்பட்டது.இந்த அறிவிப்பை அடுத்து சட்டப்பேரவைக் கூட்டத் தொடரின் போதே எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின், "தமிழகம் கடுமையான நிதி நெருக்கடியில் உள்ளபோது எம்.எல்.ஏ.க்களுக்கு ஊதிய உயர்வு தேவையற்றது என்றார். மேலும், ஊதிய உயர்வு மசோதாவுக்கு எதிராக, திமுக எம்எல்ஏக்கள் அனைவரும் கையொப்பமிட்ட கடிதத்தை சபாநாயகரிடம் வழங்கினார்.இதனைத் தொடர்ந்து, டிடிவி தினகரன், நிதி நிலை நெருக்கடியை காரணம் காட்டி அதிமுக அரசு மக்கள் தலையில் மக்களுக்கு 70% கட்டண உயர்வு கூட்டி பெரும் சுமையை சுமத்திவிட்டு எம்எல்ஏக்கு 100% ஊதிய உயர்த்தியுள்ளது என குறிப்பிட்டார். அரசின் ஈவு இரக்கமற்ற செயலால் பாதிக்கப்படுவது அப்பாவி பொது மக்கள்தான் எனவும் அப்படிப்பட்ட சம்பளமே எனக்கு வேண்டாம் எனவும் தெரிவித்தார். அந்த சம்பளத்தை நாள் வாங்கப்போவதில்லை எனவும் குறிப்பிட்டார். இந்நிலையில், எம்.எல்.ஏக்களுக்கு இந்த மாதம் பழைய சம்பளமே வழங்கப்படும் எனவும் புதிய ஊதிய உயர்வுக்கான ஒப்புதல் ஆளுநர் கையொப்பத்திற்காக காத்திருப்பதால் அடுத்த மாதம் புதிய ஊதியம் வழங்கப்படும் எனவும் சட்டப்பேரவை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.